
தமிழ்நாட்டில் மின் தடை குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ட்வீட் செய்துள்ளார் தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.
“13 அப்பாவி தமிழர்கள் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டதை டிவி பார்த்து தெரிந்துக்கொண்ட, கம்பராமாயணத்தை சேக்கிழார் எழுதினார் என கண்டுப்பிடித்த எடப்படி பழனிசாமி, இப்பொழுது மின்சாரத்தில் இயங்கும் டிவியை பார்த்து மின்தடை இருப்பதை கண்டறிந்திருக்கிறார்.
தங்களது ஆட்சியில் மின் உற்பத்திக்காக துவங்கப்பட்ட புதிய மின் திட்டங்கள் எவை? திட்டங்களின் மதிப்பீடு என்ன? அதற்காக செலவு செய்யப்பட தொகை எவ்வளவு? அந்த திட்டங்களின் இன்றைய நிலையென்ன என்பதை தமிழக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
மேதகு ஆளுநர் உரையில் குறிப்பிட்டது போல் கடந்த கால ஆட்சியில் ஏற்பட்ட குளறுபடிகள், தவறுகள், நிதிநெருக்கடிகள் தொடர்பாக மின் துறையிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முறையான பராமரிப்பு இல்லாததால் அணில்கள் உள்ளிட்ட உயிரினங்கள் கம்பிகளில் படுவதாலும் மின்தடை ஏற்பட்டிருக்கின்றனவென தங்களது ஆட்சியிலேயே உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தீர்கள். அது பொய்யா? மின் பராமரிப்பு பணிகளுக்காக 19 ஜூன் முதல் 28 ஜூன் வரை 10 நாட்களாக மின்வாரியம் எடுத்துக் கொண்ட பணிகள் 2,28,000.
ஆயினும் முடிக்கப்பட்ட பணிகள் 2,71,000. ஏறத்தாழ 42,000 கூடுதலாக பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதனை முதலில் அறிந்துக்கொள்ளுங்கள். ஆயினும் அபிராமி லிங்கனுக்கும், ஆபிரகாம் லிங்கனுக்கும் வேறுபாடு தெரியாத @EPSTamilNadu உங்களுக்கு இதெல்லாம் புரிந்தாலே ஆச்சரியம். (5/5)
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) June 30, 2021
ஆயினும் முடிக்கப்பட்ட பணிகள் 2,71,000. ஏறத்தாழ 42,000 கூடுதலாக பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதனை முதலில் அறிந்து கொள்ளுங்கள். ஆயினும் அபிராமி லிங்கனுக்கும், ஆபிரகாம் லிங்கனுக்கும் வேறுபாடு தெரியாத உங்களுக்கு இதெல்லாம் புரிந்தாலே ஆச்சரியம்” என ஐந்து ட்வீட்களில் தெரிவித்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2TpJr6h
via IFTTT
