தென் அமெரிக்காவின் வடமேற்கில் அமைந்திருக்கும் நாடு ஈகுவடார். இந்த நாட்டின் அதிபராக கில்லர்மோ லாஸ்ஸோ பதவி வகிக்கிறார். இன்னும் இரண்டு வாரங்களில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில், அதிபர் வேட்பாளராக ஃபெர்னாண்டோ வில்லவிசென்சியோ என்பவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தார். ஈக்வடாரின் தேசிய சட்டமன்றம் மே மாதம் கலைக்கப்படுவதற்கு முன்பு, ஃபெர்னாண்டோ வில்லிவிசென்சியோ அதில் உறுப்பினராக இருந்தார். ஈக்வடார் அதிபர் கில்லர்மோ லாஸ்ஸோவுக்குப் பிறகு, ஆகஸ்ட் 20 அன்று நடத்தப்படும் முதல் சுற்று வாக்கெடுப்பில் முன்னணி வேட்பாளர்களில் ஒருவராகவும் இருந்தார்.
மக்கள் தேர்தலுக்கு வாக்களிக்கத் தயாராகி வரும் நிலையில், நேற்று இரவு குய்டோவில் ஃபெர்னாண்டோ வில்லவிசென்சியோ, அங்கு இருந்த உயர்நிலைப் பள்ளியில் பிரசாரம் முடித்துவிட்டு வெளியேறியபோது, அடையாளம் தெரியாத நபர்களால் பலமுறை சுடப்பட்டார். அருகில் இருந்த கிளினிக்குக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். இந்தத் தாக்குதலில் ஒரு காவல்துறை அதிகாரியும் காயமடைந்தார். துப்பாக்கி ஏந்தியவர்கள் வில்லவிசென்சியோவின் குழுவை நோக்கி கையெறி குண்டுகளையும் வீசினர். எனினும், அவை வெடிக்கவில்லை எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த நாட்டின் அதிபர் உறுதியளித்திருக்கிறார்.
Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
from International https://ift.tt/eDfZ3hV
via
