நாளுக்கு நாள் இந்தியா - சீனா நாடுகளுக்கிடையே, எல்லை தொடர்பான பிரச்னைகள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கடந்தாண்டு கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு நாட்டு ராணுவத்தினருக்கும் ஏற்பட்ட மோதலுக்குப் பின், அந்த பகுதியில் அசாதாரணமான சூழலே நிலவுகின்றது. சீன ராணுவம் அருணாசலப்பிரதேசத்தை தங்களுடையது என்று சொந்தம் கொண்டாடி வருகின்றது. இப்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிராமம், சீனா அந்த பகுதியைக் கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் அமெரிக்க ராணுவத்தின் பாதுகாப்புத்துறையின் அறிக்கையில், அருணாசலப்பிரதேச எல்லைப் பகுதியில் சீனா புதிய வீடுகளைக் கட்டிவருவதாகத் தெரிவித்துள்ளது. மேலும், அதற்கான செயற்கைக்கோள் புகைப்படங்களும் வெளியாகியிருந்தன. இந்த அறிக்கையை அடுத்து, இந்திய மத்திய பாதுகாப்புத் துறை இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. சீனாவின் ஆக்கிரமிப்புகளை இந்தியா எந்த காலத்திலும் அனுமதிக்காது என்றும் பதில் கூறியுள்ளது.
Also Read: பீரங்கிகள், ஏவுகணைகள்... இந்தியா - சீனா எல்லையில் படைகள் தயார்நிலையில் இருப்பது ஏன்?!
2019-ம் ஆண்டு வெளியான செயற்கைக்கோள் புகைப்படங்களில் இந்த கிராமங்கள் இல்லை. சீனா ஒரே வருடத்தில் மட்டும் அருணாசலப்பிரதேச எல்லைப் பகுதியில் நான்கு கிராமங்களைப் புதிதாக உருவாக்கியுள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், ``எல்லையில் நடைபெற்றுவரும் செயல்கள் தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. சீனா தொடர்ந்து பல ஆண்டுகளாகவே இப்படி தான் சட்டவிரோதமான கட்டுமான பணிகளையும், ஆக்கிரமிப்புகளைச் செய்து கொண்டிருக்கிறது. சட்டவிரோதமான செயல்களை இந்தியா என்றுமே ஏற்காது. இந்தியா தனது கண்டனத்தைத் தொடர்ந்து பதிவு செய்யும்" என்றும்,
Second China-Constructed Enclave In Arunachal, Show New Satellite Images https://t.co/2eFdStIaLm pic.twitter.com/aAHzLXIV3k
— World conflicts Monitoring Center (@WorldBreakingN9) November 18, 2021
``இந்தியா, பாதுகாப்பை வலுப்படுத்தவும், படைகள் துரிதமாகச் செயல்படவும், எல்லைப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் மேம்படவும், எல்லைப் பகுதியில் சாலைகள், பாலங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகின்றது" என்று தெரிவித்துள்ளது. இப்போது சீனா புதிதாகக் கட்டியுள்ள கட்டுமானம் சர்வதேச எல்லைக்கு ஆறு கிலோமீட்டர் அருகில் அமைந்துள்ளது. அதேபோல, அங்கு வசிக்கும் மக்கள் யார் என்பது குறித்த தெளிவான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
from International https://ift.tt/3ntQZRF
via
