தென்கொரியாவின் முன்னணி பால் நிறுவனம், தனது அதிகாரப்பூர்வ யூடியூப் தளத்தில் வெளியிட்ட தனது பால் விளம்பர வீடியோவில், பெண்களை பசுக்களாகச் சித்திரித்ததற்கு எழுந்த கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து, அந்த வீடியோவை நீக்கியதுடன், மன்னிப்பும் கோரியுள்ளது.
Also Read: பெண்ணின் திருமண வயதை 18-லிருந்து 21 ஆக உயர்த்தும் மசோதா; ஒப்புதல் அளித்த அமைச்சரவை!
தென் கொரியாவின் முன்னணி பால் நிறுவனம் சியோல் பால் (Seoul Milk). கடந்த மாதம் 29-ம் தேதி அந்நிறுவனம், தங்கள் பால் விளம்பரத்தில், பெண்களை பசுக்கள் போல சித்திரித்து வீடியோ வெளியிட்டிருந்தது. அந்த வீடியோவில், புல்வெளியில் யோகா செய்யும் பெண்களின் பெர்சனல் காட்சிகளை ஓர் ஆண் அவர்களுக்குத் தெரியாமல் வீடியோ எடுப்பது போன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் அந்த ஆண் நெருங்குகையில், அந்தப் பெண்கள் அனைவரும் பசுக்களாகிவிடுகிறார்கள்.
தென்கொரியாவில் ஏற்கெனவே, பெண்களை அவர்களுக்குத் தெரியாமல் வீடியோ எடுக்கும் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், விளம்பரத்தில் இப்படி அதுபோன்ற காட்சியை சேர்த்திருப்பதையும், பெண்களை பசுக்கள் போல சித்திரித்திருப்பதையும் சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் மக்கள் தங்கள் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவிக்க ஆரம்பித்தனர்.
Also Read: `பெற்றோர் தாமாக மகளுக்கு கொடுக்கும் பரிசுகள் வரதட்சணை அல்ல!' - கேரள உயர்நீதிமன்றம்
இதனையடுத்து சியோல் மில்க்கின் தாய் நிறுவனமான சியோல் பால் கூட்டுறவு நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் தங்கள் நிறுவனம் வெளியிட்ட விளம்பரத்திற்காக மன்னிப்பு கோரியிருந்தது. ``கடந்த மாதம் 29-ம் தேதி சியோல் மில்க் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்ட பால் விளம்பர வீடியோவின் விருப்பத்தகாத காட்சிகளால் சங்கடப்பட்ட அனைவரிடமும் நாங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
from International https://ift.tt/3yHqfBh
via
