சீன அரசு வானிலையையே தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சமீபத்தில் சிங்குவா பல்கலைக்கழகம் (Tsinghua university) வெளியிட்ட ஆய்வு ஒன்று கூறுகிறது. இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. பொதுவாக சீனாவில் ஜூலை மாதம் என்பது வெப்பமான மாதம். இருந்தாலும் வானம் கொஞ்சம் மேக மூட்டத்துடனும் இருக்கும். எனவே பத்தாயிரம் பேருக்கு மேல் கலந்து கொள்ளும் இந்த விழா சமயத்தில் வானம் தெளிவாக நீல நிறத்தில் இருப்பதற்காக சீன அரசு "க்ளவுடு சீடிங்" (Cloud seeding) என்னும் முறையைப் பயன்படுத்தியது. இந்த முறையில் சில்வர் அயோடைடு (silver iodide) என அழைக்கப்படும் கெமிக்கலானது ராக்கெட்டுகளின் உதவியுடன் மேகங்கள் மீது தெளிக்கப்படும்.
இந்த கெமிக்கல் மேகங்களில் உள்ள நீர்த் துளிகளை ஒன்றிணைத்து மழையாக பொழிய வைக்கும். இப்படி அனைத்து மேகங்களும் முன்னரே மழையாகக் கொட்டிவிட்டால் விழா சமயத்தில் மேகமே இருக்காது. இப்படி மேக மூட்டத்தை இல்லாமல் செய்வது 'ப்ளு ஸ்கையிங்' என அழைக்கப்படுகிறது. இந்த முறையை சீன அரசு 2008 முதலே பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக் உட்பட பல்வேறு பொது நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு முன்பாக பயன்படுத்தியிருக்கிறது.
Also Read: Oviraptor: 66-72 மில்லியன் ஆண்டுகள் பழைமை - பாதுகாக்கப்பட்ட நிலையில் கருவுடன் கிடைத்த டைனோசர் முட்டை
பொது நிகழ்ச்சிகள் என்று மட்டும் இல்லாமல் மழை அதிகம் தேவைப்படும் பகுதிகளிலும் இந்த க்ளவுடு சீடிங் முறை பயன்படுத்தப்படுகிறது. இப்படி செயற்கையாக உருவாக்கப்படும் மழையினால் காற்றின் மாசு அளவு குறைவதுடன் பூமியும் கொஞ்சம் குளிர்ச்சி அடைகிறது. ஆனால் மழையுடன் சேர்ந்து வரும் கெமிக்கல், தாவரங்களை பாதிக்கவே செய்கின்றன. சில்வர் அயோடைடு மனிதர்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து சரியான தகவல்கள் எதுவும் இல்லை என்றாலும், குறைந்த அளவில் பயன்படுத்தும் வரை ஆபத்து இல்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
மற்ற நாடுகளும் இந்த முறையைப் பயன்படுத்தினாலும், சீனா தயங்காமல் பல பில்லியன்களை இதுவரை இந்தத் திட்டங்களுக்காகச் செலவழித்துள்ளது. இன்னும் 2025 க்குள் கிட்டத்தட்ட 5.5 மில்லியன் சதுர கி.மீ பரப்பளவிற்கு க்ளவுடு சீடிங் செய்யும் திட்டம் வேறு உள்ளதாம்.
சீனா இப்படி க்ளவுடு சீடிங் முறையைத் தொடர்ந்து பயன்படுத்துவது சீனாவின் அண்டை நாடுகளுக்கு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்துமாம். அதுவும் மழைக்கு பெரும்பாலும் பருவ மேகங்களை நம்பி இருக்கும் நம் நாட்டுக்கு தலைவலி தான். ஆனால், சீனா தொடர்ந்து இதனைப் பயன்படுத்தும் நோக்கோடு தான் இருக்கிறது. ஏற்கனவே மனிதர்களின் செயல்பாடுகளால் பருவநிலை மாறி வருகிறது. இதில் நம்முடைய பங்குக்கு நேரடியாகவே பருவநிலையில் கைவைப்பது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் எனத் தெரியவில்லை.
from International https://ift.tt/3pkeuhc
via
