2020-ம் ஆண்டு முதல் இந்தியா - சீனா இடையேயான அரசியல்ரீதியான உறவு சுமுகமாக இல்லையென்றாலும்கூட, வர்த்தகத்தில் அது எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. சொல்லப்போனால் வர்த்தகம் அதிகரிக்கவே செய்திருக்கிறது. கடந்த 2021-ம் ஆண்டு இதுவரை இல்லாத அளவாக சீனாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்த பொருள்களின் மதிப்பு சுமார் 100 பில்லியன் டாலர்களைத் தொட்டிருக்கிறது.
சரியாகச் சொன்னால், 97.52 பில்லியன் டாலர். (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.7,21,648 கோடி). இருநாட்டு தரப்பிலும் நடைபெற்றுள்ள வர்த்தகத்தின் மதிப்பு சுமார் 125.66 பில்லியன் டாலர்.
Also Read: மீண்டும் ஏற்றத்தில் தங்கம்; முதலீடு செய்ய, நகை வாங்க இது சரியான நேரமா?
ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட மின்னணு பொருள்கள், வாகனங்களின் பாகங்கள், இயந்திரக் கருவிகள், தொழில்துறை பொருள்கள், மருந்துப் பொருள்கள், ரசாயனங்கள், உயிரி உரங்கள் ஆகியவற்றை அதிகளவில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்திருக்கிறது இந்தியா.
2021-ன் முதல் எட்டு மாதங்களில் சீனாவிலிருந்து வாங்கிய கச்சா எண்ணெய், பெட்ரோலியப் பொருள்கள், முத்துக்கள், விலையுயர்ந்த கற்கள், நிலக்கரி, கோக் என இவை மட்டுமே கிட்டத்தட்ட 60 பில்லியன் டாலர் மதிப்பைத் தொட்டுள்ளது.
Also Read: நகை மற்றும் ரத்தினங்களின் ஏற்றுமதி மீண்டும் உயர்வு; என்ன காரணம் தெரியுமா?
2021-ல் மின்னணுப் பொருள்கள் மற்றும் இயந்திரங்களுக்கான தேவை பெருமளவில் அதிகரித்ததே சீனாவிலிருந்து இந்தியா அதிக அளவில் இறக்குமதி செய்ததற்கு காரணம் எனத் தெரிவித்துள்ளனர் தொழில்துறை நிபுணர்கள்.
from International https://ift.tt/3ArRNvc
via
