கோவிட்-19 தொற்று ஏற்பட்ட சமயத்தில் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களை மீட்டு இந்தியாவிற்கு அழைத்து வர வேண்டிய சூழ்நிலை நம் இந்திய அரசுக்கு ஏற்பட்டது. அந்த நேரத்தில் தொடங்கப்பட்டதுதான் `வந்தே பாரத்' திட்டம். மே 2020-ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின்படி வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் விமானத்தின் மூலம் தாய் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டார்கள்.
இந்தத் திட்டத்தில் மிகவும் திறமையுடன் செயல்பட்டவர்தான் பைலட் லட்சுமி ஜோஷி. எட்டு வயது முதலே பைலட் ஆக வேண்டும் என்ற கனவோடு கடினமாக உழைத்து இந்த நிலையை அடைந்தவர். கோவிட் சூழலில் `வந்தே பாரத்' திட்டத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து பகிர்ந்திருக்கிறார்.
Also Read: ஒலிம்பிக் வீரர்களைக் கண்காணிக்கவா சீனாவின் App? சர்ச்சையும் எதிர்ப்பும்
``சிறு வயதிலேயே பைலட் ஆக வேண்டும் என்ற என் கனவை என் தந்தை கடன் வாங்கி நிறைவேற்றினார். கடன் வாங்கி என்னைப் படிக்க வைத்த சூழலிலும் அவர் என்னிடம் கூறியது, `செல்ல மகளே! வானம்தான் எல்லை!' என்பது.
உறவினர்கள் அவரிடம் உங்கள் மகள் எப்போது செட்டில் ஆவாள் எனக் கேட்பார்கள். அதற்கு அவர் கூறும் பதில், `அவள் பறக்கப் பிறந்தவள்!' என்பதுதான். இந்த ஊக்கம் மற்றும் என்னுடைய உழைப்பினால் இரண்டு வருட பயிற்சியை முடித்து பைலட் ஆன பின் ஏர் இந்தியாவில் வேலைக்குச் சேர்ந்தேன். அந்தத் தருணம் மிகவும் மகிழ்ச்சியானது. என்னுடைய கனவுகளுக்கு சிறகுகள் முளைத்தது போல் இருந்தது.
இப்படி ஒரு சூழலில்தான் எனக்கு `வந்தே பாரத்' திட்டத்தில் பணியாற்ற வாய்ப்பு வந்தது. முதலில் என் பெற்றோர் தயங்கினாலும் பிறகு திட்டத்தின் முக்கியத்துவம் கருதி சம்மதித்தனர். என்னுடைய முதல் பயணம் சீனாவில் உள்ள ஷாங்காய் நகரத்திற்கு.
இந்தியாவிலிருந்து விமானத்தை இயக்கி சீனாவுக்குச் சென்று திரும்பும்வரை முழு நேரமும் கவச உடையை அணிந்துதான் இருப்போம். அனைத்து மக்களையும் கொண்டு வந்து இந்தியாவில் சேர்த்தபோது மிகுந்த மகிழ்வுடன் பாராட்டினார்கள். ஒரு சிறுமி என்னிடம் வந்து `உங்களைப் போலவே ஆக வேண்டும்' எனக் கூறினாள். அவளிடம் என் தந்தை கூறியதைதான் கூறினேன், `வானமே எல்லை!'
Also Read: அரசியல் விழாவிற்காக வானிலையைக் கட்டுப்படுத்தும் சீனா… `க்ளவுடு சீடிங்' சரியான முறையா?
நாங்கள் இந்தத் திட்டத்தில் மாதத்திற்கு மூன்று முறை பயணம் செய்வோம். மக்களை அழைத்து வருவதோடு மட்டுமன்றி ஒரு முறை நம் நாட்டிற்குத் தேவையான மருந்துப் பொருள்களையும் விமானம் மூலம் கொண்டு வந்திருக்கிறேன். சமீபத்தில் என் அப்பா, `எப்போதும் வானம்தான் எல்லை என்பேன். நீ அதையும் தொட்டுவிட்டாய். தொடர்ந்து பறந்து கொண்டே இரு' " என்று கூறினார்
வெற்றிச் சிரிப்பை உதிர்த்துப் பறக்கத் தயாராகிறார் லட்சுமி ஜோஷி.
from International https://ift.tt/3IkZnun
via
