கடந்த 2020 ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அப்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடனுக்கு எதிராகத் தோல்வியுற்று தன்னுடைய அதிபர் பதவியை இழந்திருந்தார். தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஆனால் தேர்தலில் தோல்வியுற்ற ட்ரம்ப், தேர்தல் வாக்கு இயந்திரங்களைக் கைப்பற்றுமாறு உத்தரவிட்டுள்ளார் என அமெரிக்காவின் தேசிய ஆவணக் காப்பகம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், தான் தோல்வியுற்றதை ஏற்றுக்கொள்ளாத முன்னாள் அதிபர் ட்ரம்ப், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தித் வாக்கு இயந்திரங்களைக் கைப்பற்றுமாறு உயர்மட்ட ராணுவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், இது தொடர்பாக சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க உத்தரவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் 2020 டிசம்பர் 16-ஆம் தேதியன்று பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவில், ட்ரம்ப் கையெழுத்திடவில்லை, இது குறித்து தற்போது வெளியான இந்த அறிக்கையில் குறிப்புகள் ஏதும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அதிபர் தேர்தலுக்குப் பிறகு நிகழ்ந்த அமெரிக்க நாடாளுமன்ற தாக்குதல் விசாரணைக் குழுவிடம் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தேசிய ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை, ட்ரம்ப் தனது அதிகாரத்தினை பயன்படுத்தி மோசமான குற்றங்களில் ஈடுபட்டுள்ளதை வெளிப்படையாகக் கூறும் விதமாக உள்ளது என்று குற்றம்சாட்டுகிறார்கள் ட்ரம்ப் எதிர்ப்பாளர்கள்.
Also Read: Russo-Ukrainian War: உக்கிரமடையும் ரஷ்யா - உக்ரைன் மோதல்; அமெரிக்கா இதில் அக்கறை காட்டுவது எதற்காக?
from International https://ift.tt/33E84RO
via
