அமெரிக்கா தனது பாதுகாப்புக் கூட்டணியான நேட்டோவை விஸ்தரிக்கத் திட்டமிட்டிருக்கிறது. அதில் உக்ரைனையும் சேர்த்துக்கொள்ள அமெரிக்கா முடிவு செய்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், தனது அண்டை நாடான உக்ரைன், நோட்டோ கூட்டணியில் சேர்வது தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என ரஷ்யா அஞ்சுகிறது. ஆனால், உக்ரைனை நேட்டோவில் சேர்க்கவேண்டாம் என்ற ரஷ்யாவின் கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துவிட்டது.
இந்த நிலையில், உக்ரைன் எல்லையில் ரஷ்யப் படைகள் பீரங்கிகள், போர் வாகனங்கள், ஏவுகணைகளுடன் தீவிர பயிற்சி மேற்கொண்டுவருவதாகவும், எந்நேரமும் உக்ரைனுக்குள் ரஷ்யப் படைகள் ஊடுருவும் வாய்ப்புள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யப் படையெடுப்புக்குச் சாத்தியம் இருப்பதால், உக்ரைனிலிருக்கும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் வெளியேற அமெரிக்கா உத்தரவிட்டிருந்தது.
இந்த சூழலில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ``உக்ரைன் மீது தாக்குதல் நடத்தினால் பொருளாதாரத் தடைகள் உள்ளிட்ட கடுமையான விளைவுகளை ரஷ்யா எதிர்கொள்ளவேண்டி வரும். போர் சூழல் ஏற்படுவதை அமெரிக்கா விரும்பவில்லை, அமைதியான சூழலை ஏற்படுத்தத் தேவையான முயற்சிகளை மேற்கொண்டால் அதை எங்கள் நாடு ஆதரிக்கும்" என்று கூறியுள்ளார்.
எந்நேரமும் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தங்கள் வீரர்களைத் தயார் நிலையில் வைத்துள்ளன. ரஷ்யா போர் தொடுக்கும் பட்சத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுடனும் அமெரிக்கா தொடர்ந்து பேசி வருகிறது.
Also Read: Russo-Ukrainian War: உக்கிரமடையும் ரஷ்யா - உக்ரைன் மோதல்; அமெரிக்கா இதில் அக்கறை காட்டுவது எதற்காக?
from International https://ift.tt/3nZpkYQ
via
