கண்ணாடி அறையில் பூட்டப்பட்ட நிலையில் புலி ஒன்று உலா வரும் காணொளி ஒன்று சமீபத்தில் இணையத்தில் வைரலானது. அந்தப் பூட்டப்பட்ட கண்ணாடி அறையானது சீனாவில் உள்ள ஒரு ஓட்டலின் அறை. புலி இருக்கும் இடத்தைச் சுற்றிலும், அந்த ஓட்டலில் வாடிக்கையாளர்கள் தங்குவதற்கான அறைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. வாடிக்கையாளர்கள், புலியைப் பார்த்துக்கொண்டே தங்குவது போல புதுவிதமான ஒரு அனுதாபத்தைக் கொடுப்பதற்காக அந்தச் சீன ஓட்டல் இப்படியான ஒரு முயற்சியை எடுத்திருக்கிறது.
சீனாவில் உள்ள நான்டாங்க் காட்டுப்பூங்காவில் உள்ள செண்டி ட்ரைப் ட்ரீஹவுஸ் ஓட்டலில் தான் மேற்கூறியசு போல (Sendi Tribe Treehouse Hotel) வாடிக்கையாளர்கள் புலியைப் பார்த்துக் கொண்டே தங்கும் வகையில் வசதி செய்யப்பட்டிருந்தது. வாடிக்கையாளர்கள் நேரடியாக புலியுடன் தங்கும் போது அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் புல்லட் புரூப் கண்ணாடி பொருத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓட்டலில் வேலை செய்யும் பெண் ஒருவர் பேசுகையில் புலியை நேரடியாகப் பார்க்கும் வசதியுடன் 4 அறைகள் ஓட்டலில் இருக்கின்றன. இதுவரை அவை வாடிக்கையாளர்களுக்காகத் திறக்கப்படவில்லை. எப்போது அறைகளைப் பயன்படுத்தலாம் என்று விரைவில் தெரியப்படுத்துவோம் என்று கூறியிருக்கிறார்.
இந்தப் புதிய வசதியை அறிமுகப்படுத்தியதன் மூலம் நெட்டிசன்களிடையே எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது ஓட்டல் நிர்வாகம். 'புலிகளைக் காட்சிப் பொருளாக்கி மிகவும் கொடூரமான முறையில் பணம் சம்பாதிக்க நினைக்கிறீர்கள்' என ஓட்டல் நிர்வாகத்தைத் திட்டித் தீர்க்கிறார்கள் நெட்டிசன்கள். இதற்கிடையில் புலியின் அறையுடன் இணைந்த அறைகளை மூடி வைக்குமாறு ஓட்டல் நிர்வாகத்திற்குச் சீன அதிகாரிகள் கூறியுள்ளதாகத் தெரிகிறது. ஓட்டலின் இந்தப் புதிய வசதியானது வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பாய் இருப்பார்களா எனச் சோதனை செய்திருக்கிறார்கள். ஆனால், இந்த புதிய வசதி புலிகளுக்கு எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்துமா என்பது குறித்து எந்த வித சோதனையும் செய்யப்படவில்லை.
புலிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே பொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடி சவுண்டு ப்ரூஃப் கண்ணாடியாக இருக்க வேண்டும். மேலும், ஒரு பக்கத்தில் இருந்து மட்டுமே பார்க்கும் வசதியுடன் கண்ணாடி இருக்க வேண்டும். வாடிக்கையாளர்களின் செயல்பாடுகளால் புலிகள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது. புலிகளின் நலன் சார்ந்த மதிப்பீடுகள் பலவற்றை இன்னும் செய்ய வேண்டியிருக்கிறது எனக் கூறியிருக்கிறார்கள் அதிகாரிகள். புலியைப் பார்க்கும் வசதியுடன் இருக்கும் அறைகளைப் பயன்படுத்த வேண்டுமா என்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
from International https://ift.tt/dvazCqVnh
via
