ரஷ்யா-உக்ரைன் விவகாரமானது எந்த நேரத்திலும் போர் வெடிக்கும் சூழ்நிலையிலேயே இன்னும் உள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து நேற்று வெள்ளை மாளிகையில் பேசிய அதிபர் ஜோ பைடன், "அமெரிக்கா மற்றும் நமது நட்பு நாடுகள் அனைத்தும் நேட்டோ-வின் நாடுகளை ஒவ்வொரு அங்குலமாக அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கத் தயாராக உள்ளன. நாங்கள் உக்ரைனில் சண்டையிடப் படைகளை அனுப்ப மாட்டோம். ஆனால் உக்ரேனிய மக்களுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம்" என கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய ஜோ பைடன், "பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள டான்பாஸில் உக்ரைன் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக ரஷ்ய மக்களுக்குத் தள்ளப்பட்ட தகவல்களுக்கு ஆதாரம் ஏதும் இல்லை. வரும் வாரம் அல்லது வரும் நாள்களில் உக்ரைன் மீது ரஷ்யா போர்த்தொடுக்க வாய்ப்புள்ளது. மேலும் அவர்கள் 2.8 மில்லியன் அப்பாவி மக்களைக்கொண்ட உக்ரைன் தலைநகரான கியேவை தான் அவர்கள் குறிவைப்பார்கள் என நம்புகிறோம். ஆனால், ரஷ்யா தனது திட்டங்களைத் தொடர்ந்தால் அது தேவையற்ற போரை தேர்வு செய்ததற்குப் பொறுப்பாகும். அதுமட்டுமல்லாமல் ரஷ்யா பேரழிவையும் சந்திக்க நேரிடும்" என கூறினார்.
from International https://ift.tt/EHLFTcm
via
