உக்ரைன் எல்லையில் ரஷ்யப்படைகள் குவித்துவைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தொடர்ந்து கூறிவருகிறது. ஆனால், ரஷ்யா தனது படைகளை திரும்பப் பெற்றுக்கொண்டு வருவதாகவும், தங்களுக்கு போரில் விருப்பமில்லை என்றும் மறுப்பு தெரிவித்துவருகிறது.
இந்த விவகாரம் உலக அரங்கில் உற்றுநோக்கப்பட்டு வரும் நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பு நடத்தினால் அமெரிக்காவுக்கு ஆதரவாக இந்தியா இருக்கும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ``ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் வெளி விவகார அமைச்சர்கள் அடங்கிய குவாட் அமைப்பின் கூட்டம் மெல்போர்னில் நடந்தது.
அதில், ரஷ்யா மற்றும் உக்ரைன் மோதல் விவகாரம் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. மேலும், ஜோ பைடன் நிர்வாகத்தின் கணிப்பின்படி, மாஸ்கோ உக்ரைனின் எல்லையில் 7,000 வீரர்களைப் புதிதாகச் நிலைநிறுத்தியிருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.
ஒருவேளை, உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பு நடத்தினால், சர்வதேச ஒழுங்கு தொடர்பாக உறுதியளித்துள்ள இந்தியா விதிகளின் அடிப்படையில், அமெரிக்கா பக்கம் நிற்கும் என்று நம்புகிறோம்" என்றார்.
from International https://ift.tt/zj4HdLD
via
