ரஷ்யா - உக்ரைன் இடையேயான பிரச்னையால் பல நாள்களாக பேச்சுவார்த்தை நடந்துவந்த நிலையில், திடீரென ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் மீது ராணுவ தாக்குதலை தொடங்க உத்தரவிட்டார். இதையடுத்து ரஷ்ய படைகள், உக்ரைனில் போரை தொடங்கி, கிழக்கு உக்ரைனின் டோனட்ஸ்க் உள்ளிட்ட நகரங்களை தாக்கி வருகின்றன. இந்த நிலையில், ரஷ்ய அதிபரின் போர் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிக்கை விடுத்துள்ளார்.
அதில், அதிபர் புதின் ஒரு திட்டமிடப்பட்ட போரைத் தொடங்கியுள்ளார். இது நிச்சயம் பேரழிவுகளை உண்டாக்கும். இதனால் ஏற்படும் மரணங்களுக்கும், அழிவுக்கும் ரஷ்யா தான் பொறுப்பு. இதற்கு அமெரிக்காவும், அதன் கூட்டணி நாடுகளும் நிச்சயம் ஒன்றுபட்ட வழியில் தக்க பதிலளிக்கும். உக்ரைன் மீதான தாக்குதலுக்கு உலகம் ரஷ்யாவை பொறுப்பு கூற வைக்கும்" என ரஷ்யாவுக்கு ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் பல பகுதிகளில் குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்பதாகவும் தகவல்கள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன.
from International https://ift.tt/ZIlCxyc
via
