ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்ன் நகரில் இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்துகொண்ட 4-வது குவாட் (Quadrilateral Security Group) மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த குவாட் மாநாட்டில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி, ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் மாரைஸ் பெய்ன் ஆகியோருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றிருந்தார். இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில், ``4-வது குவாட் மாநாடு வெளியுறவு அமைச்சர் கூட்டம் நிறைவடைந்தது” என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்வீட் செய்திருந்தார்.
இந்தக் கூட்டத்தில், ரஷ்யா- உக்ரைன் விவகாரம், மியான்மர் பகுதியில் நிலவும் தீவிரவாத பதட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியா-மியான்மர் எல்லையில் நடக்கும் தீவிரவாதம் குறித்து பேசுகையில், சமீபத்தில் அங்கு இந்தியாவின் கர்னல், அவரின் குடும்பத்தினர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதைச் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார்.
பின்னர் பேச்சுவார்த்தைகள் எல்லாம் முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள், ``அனைத்து நாடுகளும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டால் அத்தகைய தாக்குதல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைவாக நீதியின் முன் நிறுத்துமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
A long and productive day in Melbourne. Just finished the 4th Quad Foreign Ministers’ Meeting. Impressed by the progress we have made.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) February 11, 2022
Thank FM @MarisePayne for excellent arrangements. Heading for the press conference. pic.twitter.com/RtwvFfEUsj
எந்தவொரு நாடும் பிற நாட்டை தாக்கவோ அல்லது அச்சுறுத்தவோ ஆப்கானிஸ்தானைப் பயன்படுத்தக் கூடாது. அவர்களுக்கு நிதியளித்தல், பயிற்சியளித்தல் போன்ற செயல்களிலும் ஈடுபடக் கூடாது, அப்படி நிகழ்ந்தால் அது நேரடியாக இந்தோ- பசிபிக் பாதுகாப்பிற்குப் பாதிப்பை உண்டாக்கும்" என பாகிஸ்தானை குறிப்பிடாமல் கருத்து தெரிவித்தனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பகுதிகளை தீவிரவாத சக்திகளுக்காக பயன்படுத்திவருவதாக குற்றச்சாட்டு இருக்கிறது.
Also Read: அமெரிக்காவில் மோடி | குவாட் கூட்டணி உருவானது ஏன்... சீனாவின் கோபமும், ஆபத்துகளும்!
from International https://ift.tt/SdwM5sT
via
