உக்ரைன் அதிபர் பிப்ரவரி 16-ம் தேதி ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்க வாய்ப்புள்ளதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார். ரஷ்யா உக்ரைன் எல்லையில் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான படை வீரர்கள் நிலை நிறுத்தியிருப்பதால், இந்த விவகாரம் சர்வதேச அளவில் அனைவராலும் உற்று நோக்கப்பட்டு வருகிறது.
இருநாட்டு மோதலை தவிர்க்க ரஷ்யா - உக்ரைனுடன், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டிருக்கும் ரஷ்ய படைகளில் சிறு பகுதியினர் தங்கள் முகாமுக்கு திரும்பியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக பேட்டியளித்த ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், ``உக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்ட சில படைகள் தங்கள் பயிற்சியை முடித்த பின்னர் கிளம்புவதற்கு தயாராக இருக்கின்றனர். தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள சில படைகள் தங்கள் பயிற்சியை முடித்த பின்னர் சாலை மற்றும் ரயில் மூலம் தங்களது முகாமிற்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்" என்று கூறினார்.
from International https://ift.tt/PjQ6zON
via
