உக்ரைன் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், வெள்ளை மாளிகை இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க வெளியுறவு அமைச்சர் லேவ்ரோவ், செயலாளர் பிளிங்கன் ஆகிய இருவரும் இந்த வாரம் ஐரோப்பா செல்ல உள்ள நிலையில், இருநாட்டுத் தலைவர்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்படும்.
ஆனால், இந்த சந்திப்பு நிகழ வேண்டுமானால், உக்ரைன் மீது போரைத் தவிர்க்க ரஷ்யா ஒப்புக்கொள்ள வேண்டும். ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுக்கும் எண்ணைத்தை கைவிட வேண்டும். அதைமீறி போரைத் தொடங்கினால் ரஷ்யா கடுமையான பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். அமெரிக்கா அமைதிக்கான பேச்சுவார்த்தைக்குத் தயாராகவே இருக்கிறது. தற்போது இருக்கும் சூழலின் படி, ரஷ்யா உக்ரைன் மீது விரைவில் தாக்குதல் நடத்த முழுவீச்சில் தயாராக உள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
from International https://ift.tt/wLKRTBI
via
