அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று, தொடக்கப்பள்ளியொன்றில் 18 வயது சிறுவன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அரைக்கம்பத்தில் கொடி பறக்கவிடப்பட்டது. மேலும் இது குறித்து அமெரிக்க அதிபர் பைடன், ``இதுபோன்ற துப்பாக்கிச் சூடுகள் உலகில் வேறு எங்கும் அரிதாகவே நடக்கும். உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி ப.சிதம்பரம், இந்தச் சம்பவத்தை சுட்டிக்காட்டி, ஆயுதங்கள் வைத்திருப்பது தொடர்பாக, இந்தியா தனது சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.
One way is to impose severe gun controls and severely restrict who can buy or own a weapon
— P. Chidambaram (@PChidambaram_IN) May 26, 2022
American laws are too loose and too lenient in this regard
India too needs to review and tighten laws relating to acquisition and possession of fire-arms
ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், ``டெக்சாஸில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு மாணவர்கள் 19 பேர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதைக் கண்டிக்க வார்த்தைகளே இல்லை. இந்தச் சம்பவம் அந்தக் குழந்தைகளைப் பிரிந்து வாடும் அவர்களின் குடும்பத்தினரையும், அமெரிக்க மக்களையும் சோகத்தில் மூழ்கடித்திருக்கிறது. மேலும், வெறுக்கத்தக்கப் பேச்சுகள், கொலைகள் அதிகரித்து வருவதால், இதுபோன்ற பைத்தியக்காரத்தனத்தை நிறுத்த அனைத்து வழிகளையும் பயன்படுத்த வேண்டும்.
இதற்கான வழி, துப்பாக்கிக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதும், ஆயுதங்களை யார் வாங்கலாம் அல்லது யார் சொந்தமாக வைத்திருக்கலாம் என்பதைக் கடுமையாகக் கட்டுப்படுத்துவதுதான். இதுபோன்ற விஷயங்களில் அமெரிக்கச் சட்டங்கள் மிகவும் தளர்வானவை. எனவே இந்தியா இந்த விஷயத்தில், ஆயுதங்களைக் கையகப்படுத்துதல் மற்றும் வைத்திருப்பது தொடர்பான சட்டங்களை மறுஆய்வு செய்து சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும்" எனப் பதிவிட்டிருக்கிறார்.
from International https://ift.tt/grEY5Kk
via
