கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான இல்ஹான் ஓமர் எனும் பெண் பாகிஸ்தானுக்குச் சென்று, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட பாகிஸ்தான் உயர்மட்டத் தலைவர்களைச் சந்தித்தார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கும் பயணம் செய்திருந்தார். இந்த நிலையில், அமெரிக்க காங்கிரஸின் உறுப்பினர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குப் பயணம் செய்ததற்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. மேலும் அந்த பகுதிக்கு அவர் பயணம் செய்தது நாட்டின் இறையாண்மையை மீறுவதாகவும் கூறியது.
இந்த நிலையில், காங்கிரஸ் பெண்களான ரஷிதா தாலிப், இல்ஹான் ஓமர் மற்றும் ஜுவான் வர்காஸ் ஆகியோரால் இயற்றப்பட்ட தீர்மானம் கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், அதன் மீது தேவையான நடவடிக்கைக்காக வெள்ளை மாளிகை வெளியுறவுக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அந்த தீர்மானத்தில், ``இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் பிற மத மற்றும் கலாசார சிறுபான்மையினர் இலக்கு வைத்துத் தாக்கப்படுவது உட்பட, மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மத சுதந்திர மீறல்களை இந்தியாவில் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதை இந்த தீர்மானம் வன்மையாக கண்டிக்கிறது. இந்தியாவில் மத சிறுபான்மையினரை மோசமாக நடத்துவது குறித்து இந்த தீர்மானம் மிகுந்த கவலையை தெரிவித்துக்கொள்கிறது. எனவே, சிறுபான்மையினரின் மதச் சுதந்திரத்தை மீறும் இந்தியா மீது அக்கறைகொள்ள, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளருக்கு இதன் மூலம் தெரிவிக்க்கப்படுகிறது" எனத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
from International https://ift.tt/si7lJWx
via
