ஆஸ்திரேலியாவும், சீனாவும் பசிபிக் பகுதியை ஆக்கிரமிக்க திட்டமிடுவதாக உலக நாடுகள் பலவும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. அமெரிக்காவும் பசிபிக் நோக்கி நகர்வதாக அண்மையில் தகவல் வெளியானதிலிருந்து, தைவானைச் சுற்றி சீனா தனது முப்படைகளை குவித்து தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்த நிலையில், நேட்டோ நாடுகளின் தலைவர்களைச் சந்திக்க ஐரோப்பாவுக்குச் சென்றிருக்கும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ``சீன அதிபர் ஜி ஜின்பிங்-கின் தலைமையிலான அரசு, தைவானுடன் சீனாவை இணைக்கும் அதன் லட்சியங்களில் தெளிவாக இருக்கிறது. 70 ஆண்டுகளுக்கும் மேலாக இரண்டும் தனித் தனியாக ஆளப்பட்ட போதிலும், தைவானை ஒரு துரோக மாகாணமாக பெய்ஜிங் நீண்ட காலமாக கருதுகிறது. அதனால் அதை ஆக்கிரமிக்க திட்டமிடுகிறது. தைவானை சீனா ஆக்கிரமிக்க முயல்வதைப்போல உக்ரைனை ஆக்கிரமிக்க முயன்றுக்கொண்டிருக்கும் ரஷ்யாவின் `மூலோபாய தோல்வி' பற்றிய பாடங்களை சீனா கற்றுக்கொள்ள வேண்டும்.
உக்ரைன் விவகாரத்தின் மூலம் சீனா கற்றுக்கொள்ள வேண்டிய மற்றொரு பாடம் என்னவென்றால், யார் பாதிக்கப்பட்டாலும் ஜனநாயக நாடுகள் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்" என சீனாவை எச்சரித்தார்.
from International https://ift.tt/pAmgjdP
via
