சிறைப்பிடிக்கப்பட்ட உலகின் மிக வயதான ஆண் பாண்டா ஒன்று ஹாங்காங்கில் உள்ள ஓஷன் பார்க் என்ற பொழுதுபோக்கு பூங்காவில் இன்று கருணைக்கொலை செய்யப்பட்டிருக்கிறது. An An என்று அழைக்கப்படும் இந்த பாண்டா, அதனுடைய 35 வயதில் கருணைக்கொலை செய்யப்பட்டிருக்கிறது. 35 வயது என்பது ஒரு மனிதன் 105 வயது வரை வாழ்ந்ததற்குச் சமம் என்கிறார்கள். கடந்த சில வாரங்களாக பாண்டாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வந்ததாலும், திட உணவை முழுவதுமாக நிறுத்தி, வெறும் தண்ணீர் மட்டுமே எடுத்துக்கொண்டதாலும், கருணைக்கொலை செய்யப்பட்டதாக ஓஷன் பார்க் அதிகாரிகள் கூறுகின்றனர். பூங்காவைச் சேர்ந்த கால்நடை மருத்துவர்கள், மற்றும் பாண்டாவிற்கான சீன பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் கலந்தாலோசித்துதான் இந்த கருணைக்கொலை செய்யும் முடிவை எடுத்ததாகத் தெருவிக்கின்றனர்.
இந்த பாண்டா 1999-ம் ஆண்டு சீனாவின் மத்திய அரசால் ஹாங்காங்கிற்கு பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது.மனதைக் கவரும் தருணங்களையும், பல அன்பான நினைவுகளையும் எங்களுக்கு இந்த பாண்டா கொடுத்திருக்கிறது.அதன் புத்திசாலித்தனத்தையும், விளையாட்டுத்தனத்தையும் நாங்கள் மிகவும் மிஸ் செய்வோம் என ஓஷன் பார்க் கார்ப்பரேஷனின் தலைவர் பாலோ பாங் (Paolo Pong ) கூறியிருக்கிறார். அந்தப் பூங்காவின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பலரும் வருத்தத்தையும், இரங்கலையும் பாண்டாவிற்கு தெரிவித்து வருகின்றனர்.பொதுவாக பாண்டாக்களை தேசிய அடையாளமாக சீனர்கள் கருதி வருகின்றனர். இந்நிலையில் அழிந்து வரும் பாண்டாக்களை பாதுகாக்க சீன அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.அந்த வகையில் கடந்த ஆண்டு பாண்டாக்களை அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் சேர்த்திருக்கிறது.
from International https://ift.tt/yhUKeHY
via
