சீனா- பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம், ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக அமைக்கப்பட இருப்பதால் அதற்கு இந்தியா கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகிறது.
பாகிஸ்தான் - சீனா இணைப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் 2015 இல் தொடங்கப்பட்ட திட்டமே 'CPEC' என்றழைக்கப்படும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் அமைக்கப்படுவதால், இந்தியா சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. அதனையும் மீறி இந்த திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து சீனா செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
அண்மையில் சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் திட்டத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் இந்த வழித்தடத்தில் இணைய விரும்பும் எந்த ஒரு சர்வதேச நாட்டையும் வரவேற்பதாக இருநாட்டு பிரதிநிதிகளும் தெரிவித்தனர்.
இந்தநிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, "சீன பாகிஸ்தானுடன் இணைய சில நாடுகள் அதில் பங்கேற்பதாக தகவல்கள் வருகிறது. இது போன்ற நடவடிக்கை மூலம் இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பையும் பாதிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. பாகிஸ்தானால் சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இந்திய எல்லைப் பகுதிகளில் அமைக்கப்படும் இந்த திட்டத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிக்கிறது. இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது'' எனத் தெரிவித்திருக்கிறார்.
from International https://ift.tt/BmjwL8r
via
