உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார் லிங்க் போன்ற நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க். இப்படி பல பில்லியன்களுக்கு சொந்தக்காரான எலான் மஸ்க்கின் அம்மா கார் நிறுத்துமிடமான கேரேஜில் தூங்குகிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? “அமெரிக்காவின் டெக்ஸாஸில் உள்ள என் மகனைப் பார்க்க சென்றால் கார் நிறுத்துமிடமான கேரேஜில்தான் தூங்குவேன்” என்று உலக பணக்காரரான எலான் மஸ்கின் 74 வயதான அம்மா Maye Musk கூறியிருக்கிறார். யுனைடெட் கிங்டமில்(UK)உள்ள “தி சண்டே டைம்ஸ்" பத்திரிகைக்கு பேட்டியளித்திருக்கிறார். அதில், எலானுக்கும், அவருக்கும் இடையே உள்ள பாச பிணைப்பைப் பற்றி கூறிய பிறகு, உலகின் மிகப்பெரிய பணக்காரனாக
தன் மகன் இருந்தாலும் அதில் அவனுக்கு நாட்டமில்லை. ராக்கெட் விடும் இடத்தில் சொகுசான வீட்டை நம்மால் எதிர்பார்க்க முடியாது. அதனால் டெக்சாஸில் உள்ள எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் குடியிருப்புக்கு சென்றால் நான் கார் நிறுத்தும் கேரேஜ் இடத்தில்தான் தூங்குவேன், என்று அவர் தெரிவித்திருக்கிறார். மேலும், எலானைப் போல் செவ்வாய் கிரகத்துக்கு செல்வதில் எல்லாம் எனக்கு நாட்டம் கிடையாது. ஆனால் எனது பிள்ளைகள் விரும்பினால் அதை நான் செய்வேன் என்று எலான் மஸ்கின் அம்மா தெரிவித்துள்ளார். கடந்த 2020-இல் அனைத்து சொத்துகளையும் விற்க விரும்புவதாக எலான் மஸ்க் கூறியிருந்தார். உலக கோடீஸ்வரனாக இருந்தும் கூட தனக்கு சொந்தமாக ஒரு வீடு கூட கிடையாது, நண்பர்களுடன்தான் தங்கியிருப்பதாக எலான் மஸ்க் நடப்பாண்டின் தொடக்கத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
from International https://ift.tt/7UDcIyH
via
