உலகளவில் பல மாற்றங்களையும், மரணங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது கொரோனா பெருந்தொற்று. இதற்கு சீனா மட்டும் விதிவிலக்கல்ல.
கடந்த சில மாதங்களாக சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் கொரோனா பரவலைத் தடுக்க, சீன அரசு பல கடுமையான கட்டுப்பபாடுகளை விதித்திருந்தது. இதை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில், கடந்த மாதம் அந்தக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.
இந்நிலையில் சீன இன்ஜினீயரிங் அகாடமியை சேர்ந்த 20 முக்கிய இன்ஜினீயர்கள் மற்றும் விஞ்ஞானிகள் டிசம்பர் 15-ம் தேதி முதல் ஜனவரி 4-ம் தேதிக்குள் இறந்துள்ளதாக இந்த அகாடமியின் இணையதளம் கூறியுள்ளது. கடந்த 2017 முதல் 2021-ம் ஆண்டு வரை, சீன இன்ஜினீயரிங் அகாடமியில் குறைந்தபட்சம் 16 பேரும், 2021-ம் ஆண்டு 13 பேரும் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மிகவும் புகழ்பெற்ற சீன இன்ஜினீயரிங் அகாடமியில் 900-க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அதிவேக ரயில் நெட்வொர்க், டியாங்காங் விண்வெளி நிலையம் உள்ளிட்ட சீன நாட்டின் மிகப்பெரிய திட்டங்களில் இந்த அகாடமியின் பங்களிப்பு மிக முக்கியமானது.
ஒரு மாதத்துக்கும் குறைவான இடைவெளியில் இந்த அகாடமியைச் சேர்ந்த 20 பேர் உயிரிழந்துள்ளதும், அதன் காரணம் தெரியாததும் சீனாவில் பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
from International https://ift.tt/4RGPHS2
via
