பெண் கல்வியை நிறுத்தும் நோக்கில்பள்ளிச் சிறுமிகளுக்கு சிலர் விஷம் கொடுத்துவருவதாக ஈரானிய துணைக் கல்வி அமைச்சர் யூன்ஸ் பனாஹி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "ஈரானின் கோம் மற்றும் அதைச் சுற்றியிருக்கும் பிற நகரங்களில் மாணவிகளுக்கு வேண்டுமென்றே விஷம் கொடுக்கப்படும் சம்பவம் நடந்துவருகிறது.
அனைத்து பள்ளிகளையும், குறிப்பாக பெண்கள் பள்ளிகளை மூட வேண்டும் என்று சிலர் விரும்புவது கண்டறியப்பட்டது. மாணவர்களுக்கு கொடுக்கப் பயன்படுத்தப்படும் விஷம் அதிக சதவீதம் சிகிச்சை அளிக்கக்கூடியது என்பதும் தெரியவந்துள்ளது" எனத் தெரிவித்திருக்கிறார். ஈரானின் போருஜெர்டில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியின் 50 மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக லொரெஸ்தானின் துணை ஆளுநர் மஜித் மொனெமி தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக பள்ளி மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக வெளியான செய்திகளை வதந்திகள் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் யூசுப் நூரி கூறியிருந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவிகள் அனைவருக்கும் ஒரே அடிப்படையிலான விஷம் கொடுக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. பிப்ரவரி 14 அன்று, பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் கவர்னரேட்டிற்கு வெளியே கூடி, அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டதாக உள்ளூர் செய்தி நிறுவனம் தெரிவித்திருப்பது குறிப்பிடதக்கது.
from International https://ift.tt/mQxwfLu
via
