
ஒழுங்கான கட்டட நடைமுறைகளைப் பின்பற்றாமல் குடியிருப்புகள் கட்டிய 184 பேர் துருக்கியில் கைதுசெய்யப்பட்டனர். மேலும் 34.2 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்திருப்பதாக உலக வங்கி அறிவித்திருக்கிறது.

இஸ்தான்புல்லில் நடைபெற்ற கால்பந்து போட்டியில், துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக ஆயிரக்கணக்கான பொம்மைகளை ரசிகர்கள் வீசிச் சென்றனர்.

மார்ச் மாதம் டெல்லிக்கு வருகை தரவிருக்கும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பிலிங்கன் G20 மாநாட்டில் கலந்து கொள்வதாகக் கூறப்பட்டிருக்கிறது. இதில் அமெரிக்க -இந்தியா குறித்த எதிர்கால ஒப்பந்தங்கள் குறித்து பேசப்படும் என்று கூறப்படுகிறது.

இரானில் சிலர் பெண்களைப் பள்ளிக்குச் செல்ல விடாமல் தடுக்க அவர்களுக்கு விஷத்தைக் கொடுக்கிறார்கள் என்று அந்த் நாட்டுத் துணை கல்வித்துறை அமைச்சர் யூனஸ் பனாஹி (Younes Panahi ) தெரிவித்தார்.

வரியில்லா கடைகளில் (Duty free shops) தங்கத்தை விற்கப் பூட்டான் அரசு முடிவு செய்திருக்கிறது. சுற்றுலாப் பயணிகளை மேம்படுத்தும் முயற்சியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

நைஜீரியா அதிபர் வேட்பாளர் பீட்டர் ஓபி (Peter Ob) அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

தன் குழந்தைகளை ஹாலிவுட் படங்கள் பார்க்க அனுமதிக்கும் பெற்றோர்களை வட கொரியாவில் சிறையில் அடைப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

நேட்டோவில் ஸ்வீடன், பின்லாந்து சேர்க்கை குறித்து துருக்கியுடன் மார்ச் மாதத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மார்ச் 9 -ம் தேதி இந்த கூட்டம் நடைபெறும் என்று துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் (மெவ்லூட்) Mevlut அறிவித்தார்.

இங்கிலாந்து, வேல்ஸ் நாடுகளில் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதற்கு முன் 16 அல்லது 17 வயதுடையவர்கள் பெற்றோர்களின் அனுமதியோடு திருமணம் செய்து கொள்ளலாம் என்பது நடைமுறையிலிருந்தது.

கனடாவின் அரசு ஊழியர்களின் கைப்பேசியிலிருந்து டிக் டாக் செயலியைத் தடை செய்வதாக கனட அரசு அறிவித்திருக்கிறது. பாதுகாப்பு நடவடிக்கைகளாக இந்த முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது.

சட்டவிரோத பொருளாதாரத் தடைகள் மூலம் அமெரிக்க தங்களைச் சீண்டி வருவதாகச் சீன வெளியுறவு தூதர் Mao Ning (மாவோ நிங்) தெரிவித்திருக்கிறார்.
from International https://ift.tt/mGz9QfA
via
