
இலங்கைக்கு 2.9 பில்லியன் டாலர்கள் கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்து, உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், முதல் தவணையாக 333 மில்லியன் டாலர்களை இலங்கை பெற்றிருக்கிறது.

உக்ரைனின் தலைநகர் கீவ்-ல் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்.

உலகின் 26 சதவிகிதம் மக்கள் தூய்மையான குடிநீர் வசதிகளின்றி தவிப்பதாக ஐ.நா-வின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் 46 சதவிகிதம் மக்கள் ஒழுங்கான சுகாதார வசதிகளின்றி இருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவித்திருக்கிறது.

பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அலுவலகம் அதிர்ந்த போதும், செய்தி வாசிப்பாளர் ஒருவர் தொடர்ந்து செய்தி வாசிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
புதினை கைதுசெய்ய முயற்சிப்பதை போர் அறிவிப்பாகவே பார்க்கப்படும் என ரஷ்ய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் (Dmitry Medvedev) தெரிவித்திருக்கிறார்.

ரஷ்யப் பாப் பாடகர் டிமா நோவா (Dima Nova) சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ரஷ்ய- உக்ரைன் போரைத் தொடர்ந்து ரஷ்ய அதிபர் புதினை கடுமையாக விமர்சித்த இவர், பனிக்கட்டியில் விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

கலிஃபோர்னியா மாகாணத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில், சூறாவளிக் காற்றினால் மரங்கள் சாய்ந்ததில், இருவர் உயிரிழந்தனர்.

லெபனானின் கடுமையான பொருளாதார நெருக்கடியால், ஆயிரக்கணக்கான மக்கள் பிய்ருட் (Beirut) -ல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களைக் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசி அந்த நாட்டுக் காவல்துறை கட்டுப்படுத்தி வருகிறது.

ஹாலிவுட் நடிகர் Dick Van Dyke கலிபோர்னியாவில் கார் விபத்தில் சிக்கி, காயங்களுடன் உயிர் தப்பித்தார். 97 வயதான இவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பூஞ்சை தொற்று ஒன்று அமெரிக்காவில் அதிகமாகப் பரவி வருவதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (Centers for Disease Control and Prevention) தெரிவித்திருக்கிறது. கேண்டிடா ஆரிஸ் (Candida auris) என்ற இந்தத் தொற்று பரவிய நபர்களின் எண்ணிக்கை ஓராண்டில் 1471 ஆக உயர்ந்திருக்கிறது.
from International https://ift.tt/WUQNz1M
via
