
சீனா, தியாங்காங் விண்வெளி நிலையத்துக்கு மூன்று விண்வெளி வீரர்களைத் தனது ஷென்ஷூ-16 செயற்கைக்கோளில் அனுப்பியிருக்கிறது. முதன்முறையாக ஒரு குடிமகனை விண்வெளிக்கு அனுப்பி சோதனை செய்திருக்கிறது.

கொலம்பியா நாட்டின் அமேசான் பகுதியில், விமான விபத்தின்போது காணாமல்போன நான்கு குழந்தைகளைத் தேடும் பணி ஒருமாத காலமாகத் தொடர்ந்து வருகிறது. அவர்கள் உயிருடன் இருப்பதற்கான சான்றுகள் கிடைத்திருப்பதால், அவர்களைத் தேடும் பணியை தொடர்வதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

`தன்பாலின உறவில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்’ என்ற மசோதா உகாண்டா நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், இந்த மசோதாவில் உகாண்டா அதிபர் யோவேரி முசேவேனி கையெழுத்திட்டிருக்கிறார். இது மனித உரிமைகள் மீறல் என ஜோ பைடன் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

2015-ல் எகிப்திய கிறிஸ்தவர்களின் தலையைத் துண்டித்தது, சிர்டே நகரை கைப்பற்றியது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்ட இஸ்லாமிய பிராசார அமைப்பை சார்ந்த 23 பேருக்குத் தூக்குத் தண்டனையும், 14 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து லிபிய நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

குயனாவில் உள்ள பள்ளி விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், 5 வயது சிறுவன் உட்பட பலர் பேர் பலியான விவகாரத்தில், இங்கு தங்கியிருந்த மாணவி ஒருவரே தீ வைத்து எரித்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் அவர் தற்போது கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் நகர்வுகளை கண்காணிக்கும் நோக்கில், ஒரு ராணுவ உளவு செயற்கைக்கோளை வரும் ஜூன் மாதத்தில் செலுத்த வட கொரியா திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

கனடாவின் ஹாலிஃபாக்ஸ் பகுதியில் ஏற்பட்டிருக்கும் பயங்கர காட்டுத்தீயால், ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர்.

86 ஆண்டு கால பிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் போட்டி வரலாற்றில், சீனாவில் இருந்து கலந்து கொள்ளும் முதல் வீரர் என்கிற சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் ஜாங் ஜிசென் (Zhang Zhizhen).

மெல்பேர்னின் உள்ள இரவு விடுதி ஒன்றில், முதலைகள் உள்ளிட்ட உயிருள்ள பிராணிகளை அனுமதித்த சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகியிருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சமூக வளைதல பிரபலங்களை அழைத்து, முதலைகளுடன் புகைப்படம் எடுத்துப் பதிவிட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

சீனாவின் ஷாங்காய் நகரில் 36 டிகிரியை தொட்டது வெப்பநிலை. ஷாங்காய் நகரில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மே மாதத்தில் வெப்பம் பதிவாகியிருப்பது. இதனால் மக்கள் தவித்து வருகின்றனர்.
from International https://ift.tt/SNpzyEv
via
