
மாணவர்களுக்கு இன அடிப்படையிலான ரிசர்வேஷனுக்குத் தடை விதித்திருக்கிறது அமெரிக்க உச்ச நீதிமன்றம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க அதிபர் பைடன், கமலா ஹாரிஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

பிரான்சில் 17 வயது சிறுவனைக் காவலர் ஒருவர் சுட்டுக் கொன்றதால், பாரிஸ் நகரில் கலவரம் வெடித்தது. இந்த நிலையில், சிறுவனின் பெற்றோரிடம் காவலர் மன்னிப்புக் கோரியிருக்கிறார்.

பாகிஸ்தானியர்களுக்கு ஈகைத் திருநாள் வாழ்த்து தெரிவித்த இம்ரான் கான், `அமைதியான முறையில் போராட்டம் நடத்திய தனது கட்சிக்காரர்களைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருப்பதால், இது தனக்கு மிகவும் வலி மிகுந்த ஈகைத் திருநாள்' எனத் தெரிவித்திருக்கிறார்.

Alef Aeronautics நிறுவனத்தின் பறக்கும் கார் அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து பறக்க சட்டபூர்வ அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது.

நியூசிலாந்தில் பூர்வீகப் பறவை இனங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எலிகளை முற்றிலுமாக அழிக்க அந்த நாட்டு அரசு திட்டமிட்டிருக்கிறது.

பிரான்ஸ் உயர் நீதிமன்றம், அந்த நாட்டின் கால்பந்து கூட்டமைப்பு, `கால்பந்துப் போட்டிகளில் பெண்கள் விளையாடும்பொழுது ஹிஜாப் அணியத் தடை விதித்துக்கொள்ளலாம்' எனத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

7,960 பேர் பயணிக்கக்கூடிய உலகின் மிகப் பெரிய பயணக் கப்பலான ஐகான் ஆஃப் தி சீஸ், தனது சோதனைப் பயணத்தைத் தொடங்கியது.

ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத் பகுதியில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த வாரத்தில் இது இரண்டாவது நிலநடுக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்த பிறகும், Ocean Gate நிறுவனம், டைட்டானிக் பயணம் குறித்து தனது வலைதளத்தில் தொடர்ந்து விளம்பரம் செய்து வருகிறது.
from International https://ift.tt/B89byIE
via
