
ஆஸ்திரேலியா அரசு ட்விட்டர் நிறுவனத்துக்கு ட்விட்டரில் இருக்கும் வெறுப்பைத் தூண்டும் கருத்துக்களையும், தவறான பதிவுகளையும் நீக்க 28 நாள்கள் கால அவகாசம் வழங்கியிருக்கிறது. இதைச் செய்யத் தவறினால் ட்விட்டர் நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

சீனாவில் கடந்த சில நாள்களாக வெப்ப அலை வீசி வருகிறது. இந்த நிலையில், தலைநகர் பெய்ஜிங்கில் கடுமையான வெயிலால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். வெயில் 41.1 டிகிரி செல்சியஸ் வரம்பை எட்டியிருக்கிறது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் அபுதாபியில் இரான் வெளியுறவுதுறை அமைச்சரைச் சந்தித்தார். இது அரபு நாடுகளுக்குள் உறவை வலுப்படுத்தும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

மாலத்தீவின் நாடாளுமன்ற சபாநாயகரும், முன்னாள் அதிபருமான முகமது நஷிது ஆளுங்கட்சியை விட்டு விலகினார்கள். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் அந்த நாட்டில் நிகழவிருப்பது குறிப்பிடத்தக்கது.

டைட்டானிக் கப்பலைச் சுற்றிப்பார்க்க நீர்மூழ்கிக் கப்பலில் சென்ற 5 பேரும் உயிரிழந்துவிட்டதாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது.

தைவான் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் இணைந்திருக்கிறது. இதனால் வர்த்தகத்தில் கட்டுப்பாடுகள் வலுப்படுத்தப்பட்டிருக்கின்றன.

அடுத்த மாதம் நடக்கவிருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில், பாகிஸ்தான் கலந்துகொள்ளப் போவதாகத் தெரிவித்திருக்கிறது. இந்தியா இந்த மாநாட்டை தலைமை ஏற்று நடத்தப்போவதாக கூறப்படுகிறது.

நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் (Jacinda Ardern) `தலைமைத்துவம்' (Leadership) குறித்த புத்தகத்தை எழுதி வருவதாக தெரிவித்திருக்கிறார்.

நேற்று ஆயிரக்கணக்கான பயனர்களின் யூடியூப் முடக்கப்பட்டிருக்கிறது. சுமார் 1३,000 பயனர்கள் யூடியூப் செயலியில் சிக்கல்களைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
from International https://ift.tt/LDdkRsf
via
