
சீனாவுக்குச் செயற்கை நுண்ணறிவு சிப்களை (Artificial Intelligence Chip) ஏற்றுமதி செய்வதில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்கா பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

காணாமல் போன பிரிட்டிஷ் நடிகர் ஜூலியன் சாண்ட்ஸ் உடல் மலையேறுபவர்களால், லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக கலிஃபோர்னியா காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

தைவான் தனது கிழக்கு கடற்கரை பகுதியில் இரண்டு ரஷ்ய போர்க்கப்பலைக் கண்டதாக தெரிவித்திருக்கிறது. இந்த கப்பல்களைக் கண்காணிப்பதற்காக விமானங்களைப் பயன்படுத்தியிருக்கிறது.

`புடினின் ஆட்சி ரஷ்யாவுக்கு மிகவும் ஆபத்து' எனச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி தெரிவித்திருக்கிறார்.

உக்ரைனில் உள்ள உணவகத்தின் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 40-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
91 மீட்டர் அகலமான விண்கல் பூமியைக் கடந்துச் செல்லும் என நாசா எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

செவ்வாய் கிரகத்தைப் போலவே செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கும் வாழ்விடத்தில் நான்கு பேர் ஒரு வருட காலம் தங்கி, சவால்களை எதிர்கொள்ளப்போவதாக நாசா தெரிவித்திருக்கிறது.

பாரிஸ் தீ விபத்து நடந்து ஒரு வாரமான நிலையில், இடிபாடுகளில் மேலும் ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

சீனாவின் சின்சுவான் பகுதியில் கடுமையான வெள்ளத்தால் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. நிலச்சரிவில் சிக்கி இதுவரை நான்கு பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், 900 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர்.

பாகிஸ்தானில் நடைபெற்ற திருமணவிழாவில் ஏற்பட்ட மோதல் பெரிதானது. இந்த நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 9 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்திருக்கிறது.
from International https://ift.tt/jAgdPUM
via
