சீனாவின் ஹெனான் மாகணத்தில் வசித்தவர் வாங் யுன் Wang Yun’s (40). இவர் 2019 காலகட்டத்தில் மெங்மெங் முன் என்ற பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்திருக்கிறார். அப்போது மாணவர்களை நிர்வகிப்பது (student management) தொடர்பாக சக ஊழியருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த வாங் யுன் 2019 மார்ச் மாதம், 25 மாணவர்கள் உண்ணும் உணவில் நச்சுவான சோடியம் நைட்ரைட்டைக் கலந்திருக்கிறார்.
இதை அறியாத மாணவர்கள், அந்த உணவைச் சாப்பிட்டதால், வாந்தி, மயக்கம் ஆகிய உடல் உபாதைகளுக்கு உள்ளாகியிருக்கின்றனர். அதைத் தொடர்ந்து, 25 மாணவர்களும் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அதில் 24 மாணவர்கள் சில நாள்களிலேயே குணமடைந்தனர். அதே நேரம் வாங் யுன் கைதுசெய்யப்பட்டு, அவருக்கும் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 10 மாதங்களாக சிகிச்சைப் பெற்று வந்த ஒரு மாணவர் உறுப்புகள் செயலிழந்து உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணைக்குப் பின் காவல்துறை, ``குற்றவாளியான வாங் யுன் பள்ளியில் மாணவர்களுக்கு விஷம் கொடுப்பதற்கு முன்னர் தனது கணவருக்கும் அதே போன்று விஷம் கொடுத்துக் கொலைசெய்ய முயன்றிருக்கிறார்.
ஆனால், அவர் லேசான பாதிப்புகளுடன் உயிர் பிழைத்திருக்கிறார். இந்த இரண்டு வழக்குகளிலும், பழிவாங்கும் நோக்கில் குற்றவாளி செயல்பட்டிருப்பது தெரியவந்தது. அதனால், குற்றவாளி வாங் யுன்-க்கு மரணதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது" எனத் தெரிவித்திருக்கிறது.
from International https://ift.tt/VEjeoyu
via
