வட கொரியாவின் தலைநகரான பியோங்யாங் (Pyongyang)-ல் வெடி குண்டு விபத்து நடந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இது வட கொரிய அதிபரான கிம் ஜோங் உன் (Kim Jong un)-க்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியாகவே கருதப்படுகிறது. வடகொரியாவில் சர்வாதிகார ஆட்சி நடைபெறுவதாக உலக நாடுகள் கிம் ஜாங் உன்-ஐ சாடி வருகின்றனர். இந்த நிலையில் பியோங்யாங்கில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று நடந்திருப்பதாக வட கொரிய நாளிதழ் `The Dong-a Ilbo' செய்தி வெளியிட்டிருக்கிறது. பியாங்யாங்கில் நடந்த குண்டுவெடிப்பிற்குப் பிறகு, கிம் ஜாங் உன்-க்கான பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டிருக்கிறது.
மேலும் அவர் தன்னுடைய பாதுகாப்பு குறித்து கவலையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக ஆராய்ச்சி செய்ய பிரத்தியேக வெடிபொருள் கண்டறியும் கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றன. மேலும் அவரின் பாதுகாப்புக் குழுவில் பிரீஃப்கேஸ் பயன்படுத்தும் காவலர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பதாக ஆதாரங்கள் கூறுகின்றன.
வட கொரிய முன்னணி நிபுணரான மைக்கேல் மேடன் (Michael Madden), ``கிம் ஜாங்-உன்னைச் சுற்றிப் பாதுகாப்பு நடவடிக்கை கள் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் முக்கியமானது பாலிஸ்டிக் பெட்டிகள் (ballistic briefcases) ஆகும். கார்பன் ஃபைபரால் உருவாக்கப்பட்ட இவை, குண்டு துளைக்காத தன்மைக்காகப் பெரியளவில் பயன்படுத்தப்படுகின்றன. அது மட்டுமில்லாமல் மின்னணு அடிப்படையிலான ஆயுதங்களிலிருந்தும் பாதுகாக்கின்றன. சந்தேகத்திற்குரிய செயல்பாடுகள் நடப்பதாகக் காவல் துறையினர் கருதினாலோ, துப்பாக்கிச் சூடு நடந்தாலோ இந்தப் பெட்டிகளை கையில் வைத்திருக்கும் பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக கிம் ஜாங் உன்-யைச் சூழ்ந்து பாலிஸ்டிக் பைகளை விரிப்பார்கள். அவர் பாதுகாப்பாக காரில் ஏறும்வரை ஒரு கவசம் போலச் செயல்படுவார்கள்.
கிம் ஜாங் உன்னுடைய தந்தையான கிம் ஜோங் இல் (Kim Jong-il) பின்பற்றிய பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகளை, இப்போது கிம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலிருந்து பெறப்பட்ட ஒன்று தான் பாலிஸ்டிக் பைகள். அவரது தந்தை, அவசரக் கால மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு தேவைகளுக்காகப் பயன்படுத்தியிருக்கிறார்.
வல்லுநர்கள் இரண்டு நிகழ்ச்சிகளில் இந்த பாதுகாப்பு பெட்டிகள் பயன்படுத்தப் பட்டிருப்பதைக் கண்டறிந்திருக்கின்றனர். அதாவது, வட கொரிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தைப் பார்வையிடும்போதும், ஒரு ரிப்பன் வெட்டும் நிகழ்விலும் இந்த சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வட கொரிய அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பில் இந்த ஆண்டு கிம் ஜாங் உன்னின் பொதுமக்கள் சந்திப்பு பாதியாகக் குறைக்கப்பட்டிருக்கிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்
இந்த குண்டுவெடிப்பில் எத்தனை பேர் காயமடைந்தனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் அந்நாட்டின் செய்தித்தாளான Dong-a Ilbo-ல் வெளியான கட்டுரை ஒன்றில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. நாட்டில் நிலவும் மோசமான உணவுப் பஞ்சம் மற்றும் பட்டினியால் ஏற்பட்ட கோபத்தால் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என அச்செய்தித்தாளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
from International https://ift.tt/RwiLq8K
via
