வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் எங்கள் நண்பர்களோடு இணைந்து C&O Canal Towpath Trail-இல் மிதிவண்டிப் பயணம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். இது உலகப் புகழ்பெற்ற சைக்கிள் ஓடுபாதை ஆகும். அமெரிக்காவின் பிற மாகாணங்களிருந்தும் மற்றும் ஐரோப்பாவிலிருந்தும் ஏராளமான சைக்கிள் ஓட்டிகள் வந்து சைக்கிள் இங்கு ஓட்டுகிறார்கள். இந்த சைக்கிள் பாதையின் வரலாற்றைச் சற்று ஆராய்ந்து பார்த்தேன்.
அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள செசபீக் விரி குடாவை ஓகாயோவில் உள்ள ஓகாயோ நதியுடன் இணைக்கும் கால்வாய் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து மேற்கு எல்லை துவங்கி கிழக்கு எல்லை வரை சந்தைப் பொருட்கள் மற்றும் கனிம வளங்களுக்கான வேகமான போக்குவரத்து வழியாக செசபீக் & ஓகாயோ இழுவைப் பாதை (Chesapeake & Ohio Canal Towpath) செயல்பாட்டிலிருந்தது.
இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து, அமெரிக்கா தங்கள் அனைத்து மாகாணங்களுக்கும் எளிதில் செல்ல, வாகனப் போக்குவரத்தை அதிகப்படுத்தப் பல நெடுஞ்சாலைகள் அமைக்கத் திட்டமிட்டுப் பல ஊர்களில் நிலம், ஆறு, ஏரி, காடு என ஆக்கிரமிப்பு செய்தது.
அந்த முயற்சியில் இக்கால்வாயை வாஷிங்டன் DC முதல் பென்சில் வேனியா பிட்ஸ்பர்க்கு நகருடன் இணைக்கும் ஒரு திட்டத்தை உருவாக்கியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக, அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி வில்லியம் ஓ. டக்ளஸ், ஒரு தீவிர சுற்றுச்சூழல் ஆர்வலர், C&O கால்வாயைக் காப்பாற்றினார்.
நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்ட கால்வாய், நதியைப் போலவே, அழகு, வரலாறு, வனவிலங்குகள் மற்றும் பொழுதுபோக்கு வாய்ப்புகள் ஆகியவற்றால் நிறைந்ததாக நீதிபதி டக்ளஸ் உணர்ந்தார். அவர் நடைப் பயணமாக வாஷிங்டன் DC முதல் பென்சில் வேனியா பிட்ஸ்பர்க்கு வரை நடந்து சென்று அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடினார். பின்னர் இக்கால்வாயை ஒரு பொழுதுபோக்குப் பாதையாக மாற்றி தேசிய வரலாற்றுப் பூங்காவாக அரசு அறிவித்தது.
இந்த கால்வாய் ஓடு பாதையில் காட்டு விலங்குகள் மான், கரடி, பல பறவை இனங்கள், ஊர்வன பாம்பு, ஆமை போன்றவற்றைப் பார்த்து மகிழலாம். இன்று, C&O கால்வாய் தேசிய வரலாற்றுப் பூங்காவிற்குக் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் 3 மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட மக்கள் வருகை தருகின்றனர்.
பூங்காவின் முக்கிய பயன்பாடானது கால்வாய் இழுவைப் பாதையில் சைக்கிள் ஓட்டுவதுதான். வாஷிங்டன், DC க்கு அருகில் இழுவைப் பாதையில் சைக்கிள் பயணிகளுக்குப் பெருமளவில் சேவை செய்கிறது. வாஷிங்டன் நகரின் உற்சாகம் மங்கி, 1900களின் முற்பகுதியில் சைக்கிள் ஓட்டுவது போல் உணர முடியும். கால்வாயின் முழு நீளத்தையும் கடந்து செல்லும் சைக்கிள் ஓட்டிகள் 19 ஆம் நூற்றாண்டில் இக்கால்வாயில் கோவேறு கழுதைகள் இழுப்பதை விட மிகவும் அழகான காட்சியாக இருக்கின்றன.
இப்பாதையின் சைக்கிள் சவாரி இயற்கை, பறவைகள், வனவிலங்குகள் என நமக்கு இடையே ஒரு பிணைப்பை உருவாக்குகிறது. இயற்கை நமக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுக்கிறது. குறிப்பாக எப்படி திட்டமிடுவது, ஆபத்தை எப்படி அணுகுவது மற்றும் எல்லா சூழ்நிலைகளிலும் நாம் எப்படி வாழவேண்டும் எனச் சிந்திக்க வைக்கிறது.
இது நீதிபதி வில்லியம் ஓ. டக்ளஸ் ஒரு நபரின் நினைவாக அர்ப்பணிக்கப்பட்ட ஒரே அமெரிக்கத் தேசிய பூங்காவாகும். நீதிபதி வில்லியம் ஓ. டக்ளஸ், C&O Canal Towpath பற்றிய அவரது கருத்தை இன்றைய சுற்றுச் சூழல் போராளிகள் பின்பற்ற வேண்டும். கடந்த வார இறுதியில் நாங்கள் C&O Canal Towpath-இல் சைக்கிள் செய்த பயணப் படங்களை கண்டுகளியுங்கள்.
- முருகவேலு வைத்தியநாதன்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
from International https://ift.tt/7YDv58J
via
