டெல்லியில் உலக நாடுகள் பங்கேற்ற G20 மாநாட்டுக்குப் பிறகு, இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன்னும் சந்தித்துப் பேசிய விவகாரம் உலகளவில் கவனம் பெற்றிருக்கிறது. வடகொரியா அதிபர் கிம்ஜாங் உன் சென்ற ரயில் நேற்று ரஷ்யா - வடகொரியா எல்லையான காசானில் நிறுத்தப்பட்டது. அங்கு வடகொரிய அதிபரை வரவேற்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
அமைச்சர் அலெக்சாண்டர் கோஸ்லோவ், மற்றும் முக்கிய அதிகாரிகள் உள்ளிட்டோர் வடகொரிய அதிபரை வரவேற்றனர். அதைத் தொடர்ந்து, ரஷ்யாவின் கிழக்கு காஸ்மோட்ரோவில் ரஷ்ய அதிபரும், வடகொரிய அதிபரும் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பில், அமெரிக்கா குறித்து, இரு நாடுகளுக்கும் இருக்கும் தனித்தனி மோதல்கள் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
மேலும், ரஷ்யா - வடகொரியா நாடுகளின் சந்திப்பை பொருத்தவரை, தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளில் தளர்வு மற்றும் ஆயுத வளர்ச்சிக்கு இரண்டு நாடுகளும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, வடகொரிய அதிபர் தெரிவித்ததாக அவரது மொழிப்பெயர்ப்பாளர் மூலம் வெளியான தகவலில், ``ரஷ்யா தனது இறையாண்மை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த மேலாதிக்க சக்திகளுக்கு எதிராக ஒரு புனிதமான போராட்டத்தை நடத்தி வருகிறது. எனவே, இரு நாடுகளும் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக ஒன்றாகப் போராடும். ரஷ்ய அதிபர் புதின் மற்றும் ரஷ்ய தலைமையின் முடிவுகளை நாங்கள் எப்போதும் ஆதரிப்போம். ரஷ்ய அதிபரின் வேலைப்பளு அதிகம் இருந்தாலும், என்னை சந்திக்க வந்ததில் மகிழ்ச்சி. அவரின் வருகைக்கு நன்றி" எனக் கூறியதாக குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் ``வடகொரியாவின் செயற்கைக்கோள் தொழில்நுட்ப திறனை மேம்படுத்த ரஷ்யா உதவும்" என்று புதின் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
from International https://ift.tt/srUHwi5
via
