கேரள மாநிலம் கோட்டயம் ஏட்டுமானூரை சேர்ந்த, அமல் ரெஜியும் அவரின் மனைவி மீராவும் கடந்த ஆறு வருடங்களாக அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு குழந்தையும் இருக்கிறது. தம்பதியினரிடையே சில குடும்பப் பிரச்னைகள் இருந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் இருக்கும் தேவாலயத்துக்குத் தம்பதிகள் சென்றிருக்கிறார்கள்.
இருவரும் பிரார்த்தனை முடிந்து கார் பார்க்கிங் ஏரியாவில் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டிருக்கிறது. தேவாலயத்திலிருந்தவர்கள் சத்தம் வந்த திசைக்குச் சென்றபோது மீரா ஆபிரகாமின் வயிற்றிலும், கன்னத்திலும் துப்பாக்கியால் சுடப்பட்டிருந்தது. உடனே காவல்துறைக்கு தகவலளித்து, மீரா ஆபிரகாமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மீரா ஆபிரகாம் மூன்றுமாத கர்ப்பமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. மீரா ஆபிரகாமுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
அந்தக் கர்ப்பம் தொடர்பான விவாதத்தில்தான் இந்த துப்பாக்கிச்சூடு நடந்திருக்கலாம் என அவர்களது உறவினர்கள் சந்தேகிக்கின்றனர். மீரா ஆபிரகாமின் இரட்டை சகோதரிகளும், அமல் ரெஜியின் மூன்று சகோதரர்களும் குடும்பத்துடன் அமெரிக்காவில்தான் வசித்து வருகின்றனர். அவர்களுக்கும் இந்த சம்பவம் தொடர்பாக தகவலளித்த காவல்துறை அமல் ரெஜியை கைது செய்து விசாரித்து வருகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from International https://ift.tt/2Hd8zov
via
