லண்டனைச் சேர்ந்தவர் அலிசன் கோஸி. இவர் அமெரிக்காவுக்குத் தொழில்முறைப் பயணமாகக் கடந்த ஏப்ரல் மாதம் சென்றிருக்கிறார். அப்போது நியூயார்க்கின் மவுன்ட் கிஸ்கோவிலுள்ள ஒரு உயர்தர உணவகத்தில் சாப்பிடச் சென்றிருக்கிறார். அங்கு அவருக்குப் பரிமாறப்பட்ட சாலட்டில் மனித விரல் துண்டு இருந்திருக்கிறது. அதைக் கவனிக்காமல் கடித்தவர், அது விரல் துண்டு என்பதை உணர்ந்ததும், கடுமையான பதற்றத்துக்கு ஆளாகியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியே கூறுவதற்கு முன்பு கடுமையான அதிர்ச்சி காரணமாக ஒற்றைத் தலைவலி, மனநலக் குறைபாடு, மன அழுத்தம் மற்றும் பதற்றம், குமட்டல், வாந்தி, தலைச்சுற்றல் போன்றவற்றால் அவதிப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை, வெஸ்ட்செஸ்டர் மாவட்ட சுகாதாரத்துறை ஜெர்னலிடம், இந்த விவகாரம் குறித்துப் புகார் அளித்திருக்கிறார். இந்தப் புகாரை ஏற்றுக்கொண்ட சுகாதாரத்துறை, இது தொடர்பாக விசாரணையைத் தொடங்கியது.
இது தொடர்பாகப் பேசிய சுகாதாரத்துறை அதிகாரிகள், ``சம்பவம் நடந்த அன்று, உணவகத்தில் மேலாளர் ஒருவர் அருகுலா எனும் இலையை நறுக்கும்போது தவறுதலாக அவரின் சுட்டு விரலை வெட்டிவிட்டார். உடனே அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். இதற்கிடையில், துண்டான விரல், வாடிக்கையாளருக்காகத் தயாரிக்கப்பட்ட சாலட்டில் விழுந்திருக்கிறது. உணவு பரிமாறிய நபர், அதை கவனிக்காமல் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார்.
அலிசன் கோஸியும் அதை அப்படியே கடித்திருக்கிறார் என்பது தெரியவந்தது. எனவே, உணவு விடுதியின் இந்த அஜாக்கிரதையான செயலுக்கு 900 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது" எனத் தெரிவித்தனர்.
ஆனால், அலிசன் கோஸி, ``இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கையில் எனக்குத் திருப்தி இல்லை. கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான எனக்கு, இன்னும் ஏதேனும் உறுதியான நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது" எனத் தெரிவித்தார்.
from International https://ift.tt/rds6GYD
via
