அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீன். இவர்மீது சிறுமிகள், பெண்கள் எனப் பலரையும் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து, 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 2005-ம் ஆண்டு கைதுசெய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, 13 மாதங்கள், சிறைத் தண்டனைக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார். அதன் பிறகு, 2019-ல் மைனர் சிறுமிகளைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் ஜெஃப்ரி எப்ஸ்டீன் மீண்டும் கைதானார்.
அது தொடர்பான வழக்கு விசாரணை நடக்கும்போதே, ஜெஃப்ரி திடீரென சிறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார். ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பாக வெளியான ரகசிய ஆவணங்களில், முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்ட்டன், அவர் மனைவி ஹிலாரி கிளின்ட்டன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றன. இதற்கிடையே ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணங்கள் தொடர்பாக சில பகீர் தகவல்களும் வெளியாகின.
அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்ட்டன், இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் இங்கிலாந்து வணிக அதிபர் ரிச்சர்ட் பிரான்சன் உள்ளிட்ட பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்களை ஜெஃப்ரி வைத்திருந்திருந்தார். இது தொடர்பாக வெளியான தகவலில், ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கின் முக்கிய சாட்சியான வர்ஜீனியா கியுஃப்ரே (பாதிக்கப்பட்டவர்) அளித்த வாக்குமூலத்தில், ``நியூயார்க் நகர டவுன்ஹவுஸில் தி டன்ஜியன் என்ற ரகசிய அறையை ஜெஃப்ரி எப்ஸ்டீன் வைத்திருந்தார். அந்த அறை முழுவதும், அவரும், பாதிக்கப்பட்ட பெண்களும் உறவில் ஈடுபடுவது போன்ற பெரிய புகைப்படங்கள் இருந்தன.
பொழுதுபோக்கு அறை, படுக்கையறை உட்பட பல்வேறு இடங்களில் அத்தகைய புகைப்படங்கள் இருந்தன. அவரது மேஜையில் குறைந்தது 50 புகைப்படங்கள் இருந்தன. சில நிர்வாண புகைப்படங்கள், சில மோசமான நிலையில் பெண்களுடன் இருக்கும் படங்களும் இருந்தன" என்று குறிப்பிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
from International https://ift.tt/y3WSpoF
via
