அமெரிக்காவில் உள்ள ஆர்கன்சாஸ் நகரில் இருக்கும் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்தவர் ஹீதர் ஹேர் (33). இவர் கொரோனா தொற்றின்போது, ஆன்லைன் வகுப்புகள் நடத்தி வந்தார். அப்போது உயர் நிலை வகுப்பில் பயிலும் ஒரு மாணவருடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, அவரை வகுப்பில் சந்தித்தார். பாடம் தொடர்பாக உரையாட வேண்டும் என செல்போன் எண்களைப் பறிமாறிக்கொண்டனர். மாணவருடன் உரையாற்ற இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்தியிருக்கிறார் ஆசிரியை.
அதைத் தொடர்ந்து இருவரும் நெருக்கமாகப் பழகி வந்திருக்கின்றனர். அந்த மாணவர் பள்ளிப் படிப்பை நிறைவு செய்து அங்கிருந்து வெளியில் சென்றுவிட்ட நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், தான் ஆசிரியை ஹீதர் ஹேரால் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக, 17 வயதான அந்த மாணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் காரணமாக ஆசிரியையான ஹீதர் ஹேர் கைதுசெய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்குத் தொடர்பாக வாக்குமூலம் அளித்த அந்த மாணவர், ``பாடம் குறித்துப் பேச செல்போன் எண்ணை வாங்கிக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து, என்னுடன் உடலுறவுக் கொள்வதுபோலக் கனவு கண்டதாகத் தெரிவித்தார். அதை நேரில் செய்துபார்க்க வேண்டும் என வற்புறுத்தினார். அதைத் தொடர்ந்து, அவரது வீட்டில், ஹோட்டலில், காரில், வகுப்பில், பள்ளி வாகனம் நிறுத்துமிடத்தில் எனச் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், என்னுடன் உறவு வைத்துக்கொண்டார். 2021-2022 பள்ளியில் படிக்கும்போது ஏறக்குறைய 20 முதல் 30 முறை வற்புறுத்தி, என்னுடன் உடலுறவு கொண்டார்" எனக் குறிப்பிட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்ற விசாரணையின்போது அழுதுகொண்டே பேசிய ஆசிரியை ஹீதர் ஹேர், ``2022-ம் ஆண்டு பள்ளியில் எங்களுக்கு மத்தியில் தொடர்பு ஏற்பட்டது. என் மாணவருடன் 20 - 30 முறை பாலியல் உறவு கொண்டேன். என் குற்றத்தை நான் ஒப்புக்கொள்கிறேன்" எனத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கின் தீர்ப்பு வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியைக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
from International https://ift.tt/fTKYCgi
via
