இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு சீனாவிலிருந்து பிரிந்து தனிநாடாக அறிவித்துக்கொண்ட தைவான், அமெரிக்காவுடன் நெருக்கமாக இருக்கிறது. அமெரிக்கா தைவானுக்கு ஆதரவாக இருப்பது, சீனாவை எரிச்சலுடைய வைத்திருக்கிறது. இந்த நிலையில், தைவானுக்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை அமெரிக்கா வழங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், தைவானைத் தொடர்ந்து உரிமைக் கொண்டாடும் சீனா, இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துவருகிறது.
இதற்கிடையில், தைவானில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பய்ட்டது. அதற்கு சீனா கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது. ஆனாலும், தைவான் அரசு தேர்தல் ஏற்பாடுகளை செய்துவந்தது. இந்த நிலையில், சீனாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாங் சியோகாங் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,``தைவானைத் தனிநாடாகக் கருதி, சீனாவை விடுத்து சுதந்திரத்தை மேம்படுத்துவதற்கான ஒவ்வொரு முயற்சியும் முறியடிக்கப்படும். சீன மக்களும், சீன ராணுவம் முழு நேரமும் அதிக விழிப்புடன் செயல்பட்டு, தைவானின் அனைத்து முயற்சிகளையும் முறியடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.
மேலும், தைவானின் ஆளும் ஜனநாயக முற்போக்குக் கட்சி, அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களை வாங்குவதன் மூலம் தைவானைப் போரின் ஆபத்தான நிலைமைகளை நோக்கி தள்ளுகிறது" எனக் கடுமையாக எச்சரித்திருக்கிறார்.
ஆனால், சீனாவின் இந்த எச்சரிக்கையை கண்டுகொள்ளாத தைவான், இன்று நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி முடித்திருக்கிறது. இந்தத் தேர்தலில் டிபிபி-யின் லாய் சிங்-தே (Lai Ching-te - DDP), கே.எம்.டி-யின் ஹூ யு-இ (Hou Yu-ih - KMT) மற்றும் டிபிபியின் கோ வென்-ஜே (Ko Wen-je - TPP) ஆகிய மூவர் ஜனாதிபதி பதவிக்காகப் போட்டியிடுகின்றனர்.
இதற்கான வாக்குப்பதிவு தைவானில் இன்று காலைமுதல் நடந்து வந்தது. 24 பில்லியன் தைவான் மக்கள், நீண்ட வரிசையில் நின்று வாக்கு செலுத்தினர். தைவான் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
from International https://ift.tt/ctE26pL
via
