
நடிகர் மோகன்லாலின் ’த்ரிஷ்யம் 2’ திரைப்படம் அரேபிய நாடுகளில் நாளை வெளியாகிறது.
மோகன்லால் நடித்த ‘த்ரிஷ்யம் 2’ திரைப்படம் கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்களில் வெளியாகாமல் கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி ஓடிடியில் வெளியானது. முதல் பாகத்தைப்போலவே இரண்டாம் பாகத்தையும் ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் கொண்டாடினார்கள். அப்படி, வரவேற்பை கொடுத்தாலும் பெரும்பான்மையான ரசிகர்கள் ‘த்ரிஷ்யம் 2’ தியேட்டர்களில் வெளியாகாதது ஏமாற்றத்தை கொடுத்தது என்று தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தினார்கள்.
For those of you in UAE, Qatar and Oman, #Drishyam2 finally reaches the big screen.
— Mohanlal (@Mohanlal) June 30, 2021
Releasing tomorrow!@PharsFilm #Jeethujoseph @antonypbvr @aashirvadcine pic.twitter.com/7NCWXxjNh7
ஆனால், கேரளாவில் இப்போதுவரை தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், அரேபிய நாடுகளான ஐக்கிய அரேபிய நாடுகள், கத்தார், ஓமன் உள்ளிட்ட நாடுகளில் ஜூலை 1 நாளை முதல் வெளியாகிறது. இதனை மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். அரேபிய நாடுகளில் வசிக்கும் இந்தியர்களில் அதிக சதவீதத்தினர் மலையாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3hmFpDS
via IFTTT
