
”விஜய்யுடன் மிக விரைவில் நடிப்பேன்” என்று ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா.
தெலுங்கில் மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், விஜய் தேவாரகொண்டா என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா தற்போது, ’விஜய்யுடன் மிக விரைவில் நடிப்பேன்’ என்று ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

ரசிகர்களுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேள்வி, பதில் மூலம் உரையாடியவர் ”தளபதி விஜய்யுடன் எப்போது நடிப்பீர்கள்?” என்று விஜய் ரசிகர் ஒருவர் கேட்டக் கேள்விக்கு ’மிக விரைவில்’ என்று பதிலளித்துள்ளார். மற்றொரு விஜய் ரசிகர் ‘தளபதியைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்கள்?’ என்று கேட்டதற்கு “விஜய் என்னுடைய லவ்” என்று க்யூட்டான வெட்கத்துடன் பதிலளித்துள்ளார்.

இதனால், விஜய் ரசிகர்கள் விஜய் – ராஷ்மிகா மந்தனா கூட்டணியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே, கார்த்தி நடிப்பில் ‘சுல்தான்’ படத்தில் ராஷ்மிகா தமிழில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3AgreIS
via IFTTT
