இந்தியாவில் விளைவிக்கப்படும் விவசாய பொருட்கள் முதல் உற்பத்தி ஆகும் எஃப்.எம்.சி.ஜி பொருட்கள் வரை அனைத்துக்கும் வெளிநாடுகளில் மவுசு அதிகம். `மேட் இன் இந்தியா' என்று இருக்கும் பொருட்களை வெளிநாட்டு மக்கள் இப்போது விரும்பி வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
இதைக் கருத்தில் கொண்டுதான், சமீபத்தில் கூட தமிழகத்தில் இருந்து அதிகமான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார். அதாவது `மேட் இன் இந்தியா' என்பது போல, `மேட் இன் தமிழ்நாடு' என்கிற நிலை உருவாக வேண்டும் என அவர் குறிப்பிட்டிருந்தார். தமிழக ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு சலுகைகளையும் அவர் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில்தான் இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் சேர்ந்து, நடப்பு 2021-2022-ம் நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் 301.08 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்திருக்கிறது என இந்திய ஏற்றுமதி கழகம் தெரிவித்திருக்கிறது. நடப்பு நிதி ஆண்டு முடியும் போது சுமார் 400 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்திருக்கும் என்றும் அந்த அமைப்பு கணித்துள்ளது. வருகிற 2022-2023-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி இலக்கு 500 பில்லியன் டாலர்களாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
இது குறித்தும், இந்தியாவின் எந்த்நெந்த ஏற்றுமதி பொருட்களுக்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்பது பற்றியும் புளூபாரத் எக்ஸிம் நிறுவனத்தின் தலைவர் மற்றும் முன்னணி ஏற்றுமதியாளர்களில் ஒருவரான கே.எஸ்.கமாலுதீனிடம் கேட்டோம்.
``டி.ஜி.எஃப்.டி (Directorate General of Foreign Trade) அமைப்பின் சமீபத்திய கணிப்பானது சரியாகவே இருக்கிறது. இந்தக் கணிப்பு இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தியும் கூட. இன்றைய நிலையில் இந்தியப் பொருட்களுக்கு உலக நாடுகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்தியா தயாரிக்கும் பொருட்களின் தரம் அதற்கு ஒரு காரணம் என்றாலும், ஏற்றுமதியில் இதுவரை சிறந்து விளங்கிய சீனப் பொருட்களின் மீது வெளிநாட்டு மக்களுக்கு எற்பட்டிருக்கும் நம்பிக்கையில்லா தன்மையும் ஒரு காரணமாக இருக்கிறது. அதனால், சீனாவுக்கு கிடைக்க வேண்டிய ஏற்றுமதி வாய்ப்புகளில் பெரும்பாலான ஆர்டர்கள் இந்தியாவுக்கு கிடைத்து வருகிறது.
அந்த வகையில் பேனா, பென்சில் மாதிரியான இந்திய ஸ்டேஷனரீஸ் பொருட்களுக்கு இன்று கிராக்கி அதிகரிக்கிறது. `மேட் இன் சீனா' என்று இருக்கும் பென்சிலை வாங்குவதை விட, `மேட் இன் இந்தியா' என்று இருக்கும் பென்சில்களைத்தான் உலக மக்கள் வாங்க ஆசைப்படுகிறார்கள். ஒரு சாதாரண பென்சில் விஷயத்தில் இப்படி என்றால், மற்ற பொருட்களுக்கான தேவை மற்றும் வர்த்தகத்தை பற்றி இந்திய ஏற்றுமதியாளர்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.
Also Read: வேளாண் பொருள்களை ஏற்றுமதி செய்ய அபெடா சான்றிதழ் அவசியமா?
அதுமட்டுமில்லாமல், எஃப்.எம்.சி.ஜி பொருட்களுக்கான தேவை முன்பு இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது. அதனால் அந்தப் பொருட்களை தேர்வு செய்தும் ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி செய்யலாம். குறிப்பாக போலந்து, வங்கதேசம் மாதிரியான நாடுகளில் இந்திய சைக்கிள்களுக்கு அதிக தேவை உருவாகியிருக்கிறது. இங்கு ரூ.7,000-க்கு விற்கப்படும் ஒரு சைக்கிளை, மற்ற நாடுகளில் ரூ.15,000 கொடுத்து மக்கள் வாங்கத் தயாராக இருக்கிறார்கள். மேலும் இயந்திரங்கள் மற்றும் விவசாயப் பொருட்களுக்கும் தேவை அதிக அளவில் உருவாகியிருக்கிறது.
மலைக்க வைக்கும் ஃப்ரைட் சார்ஜஸ்!
கப்பல்கள் மற்றும் விமானங்களில்தான் பொட்களை நாம் வெளிநாடுகளுக்கு அனுப்பி வருகிறோம். தாமதமாக சென்று சேரும் பொருட்களை கப்பல்கள் மூலமாகவும், வேகமாக சென்று சேர வேண்டும் என்கிற பொருட்களை விமானம் மூலமாகவும் அனுப்புவது இந்திய ஏற்றுமதியாளர்களின் வழக்கம். கப்பல்களில் அனுப்பும் பொருட்களுக்கு ஷிப்பிங் சார்ஜஸ் உண்டு. விமானங்களில் பொருட்களை அனுப்புவதற்கு `ஃப்ரைட் சார்ஜ் (Freight Charges)' கட்ட வேண்டும். கடந்த ஒரு ஆண்டுகளாகவே இந்தக் கட்டணங்கள் அதிகமாக இருக்கின்றன. குறிப்பாக ஃபிரைட் சார்ஜஸ் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. இதனால் இந்திய ஏற்றுமதியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
உதாரணத்துக்கு கொரோனா நோய்த் தொற்றுக்கு முன்பு சென்னையிலிருந்து அமெரிக்காவுக்கு பொருட்களை அனுப்ப ஃபைரைட் சார்ஜஸ் சுமார் 1,500 டாலர். இப்போது அது 10,000 டாலர். அதே போல சென்னையிலிருந்து அருகில் இருக்கும் இலங்கைக்கு அனுப்ப 300 டாலராக இருந்தது. இப்போது அது 1,000 டாலராக அதிகரித்திருக்கிறது. கட்டணங்களின் விலை அதிகரித்த போதும், இந்திய ஏற்றுமதியாளர்கள் நடப்பு நிதியாண்டில் சுமார் 400 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்ய முடிகிறது என்றால், இந்தக் கட்டணங்களை குறைக்கும் போது வருகிற நிதியாண்டில் 500 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை மட்டுமல்ல; அதையும் தாண்டி இந்திய ஏற்றுமதியாளர்களால் அனுப்ப முடியும்.
Also Read: உள்ளூரில் உற்பத்தி... வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி! ‘ஒளிரும்’ சென்னைப் பெண் ஷர்மிளா...!
ஃப்ரைட் சார்ஜஸைக் குறைக்க வேண்டும் என்கிற இந்திய ஏற்றுமதியாளர்களின் கோரிக்கையை ஏற்று WTO (World Trading Organization) அதை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். அப்போது இன்னும் ஏராளமான பொருட்களை இந்தியாவால் ஏற்றுமதி செய்து, உலக நாடுகளிலேயே அதிகமான பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியா என்கிற பெருமையை நம்மால் பெற முடியும்" என்றார் தெளிவாக.
from International https://ift.tt/3qRguOA
via
