அருணாச்சலப் பிரதேசத்தில் எல்லைக் கட்டுப்பாடு அருகே காணாமல் போன 17 வயது சிறுவனைச் சீன ராணுவம் கண்டுபிடித்துள்ளதாகவும், அவரை நாட்டிற்கு அழைத்து வர உரிய நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்திய ராணுவத்தைக் குறிப்பிட்டு ஏ.என்.ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
``அருணாச்சலப் பிரதேசத்தில் இருந்து காணாமல் போன சிறுவனை சீன ராணுவம் கண்டுபிடித்துள்ளதாக எங்களிடம் தெரிவித்துள்ளது" என தேஜ்பூர் லெப்டினன்ட் கர்னல் ஹர்ஷ்வர்தன் பாண்டே கூறியதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிறுவன் காணாமல் போனதை அடுத்து இந்திய இராணுவம், சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்திடம் (பிஎல்ஏ) உதவி கோரியது. சிறுவன், LAC வழியாக அடிக்கடி வேட்டைக்குச் செல்லும் உள்ளூர் வேட்டைக்கார கும்பலுடன் இருப்பதாகக் கூறப்படுகிறது . அப்படி வேட்டைக்குச் செல்லும்போது இந்தியாவுக்குள் வரும் சாங்போ நதியின் நுழைவின் அருகில் சீன இராணுவத்தால் பிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
The Chinese Army has communicated to us that they have found a missing boy from Arunachal Pradesh and the due procedure is being followed: PRO Defence, Tezpur Lt Col Harshvardhan Pandey
— ANI (@ANI) January 23, 2022
கடந்த புதன்கிழமை சிறுவன் சீன ராணுவத்தினரால் பிடிக்கப்பட்டதை அடுத்து, மக்கள் செய்தி அலுவலர் இது தொடர்பாக வியாழக்கிழமை ட்வீட் செய்திருந்தார் . அதில் ``அருணாச்சலப் பிரதேசத்தின் ஜிடோவைச் சேர்ந்த 17 வயது இளைஞன் மிரம் டாரோம். எல்லை கட்டுபாட்டில் சீன ராணுவத்தினரால் பிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்திய ராணுவம் உடனடியாக சீன படைகளை ஹாட்லைன் மூலம் தொடர்புகொண்டது. நெறிமுறைகளைப் பின்பற்றி அவரைக் கண்டுபிடித்து திருப்பி அனுப்ப அவர்களிடம் உதவி கோரப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டிருந்தார்.
மிரம் டாரோன் புதன்கிழமை காணவில்லை என்று அருணாச்சல் (கிழக்கு) மக்களவை எம்.பி-யான தபீர் காவ், செய்தி நிறுவனமான பி.டி.ஐ, நண்பர் ஜானி யாய்யிங் ஆகியோரிடம் கூறியுள்ளார் .
அதைத் தொடர்ந்து அருணாச்சலப் பிரதேசத்தின் சுபன்சிரி மாவட்டத்தின் தலைமையகமான ஜிரோவிலிருந்து தொலைபேசியில் காவ் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ளார்.
இவ்வாறு சீனாவின் படைகள் இந்தியர்களைப் பிடித்துச் செல்வது இது முதன்முறை அல்ல. இதே போல் பல முறை எல்லை மாவட்டங்களில் மக்களைக் கடத்திச் செல்வதை சீனா வழக்கமாக கொண்டுள்ளது.
செப்டம்பர் 2020-ல், மேல் சுபன்சிரி மாவட்டத்தில் இருந்து ஐந்து சிறுவர்களை சீன படைகள் கடத்திச் சென்றன. அவர்கள் ஒரு வாரம் கழித்தே விடுவிக்கப்பட்டனர். அதே ஆண்டு மார்ச் மாதம் அதேப் பகுதியிலிருந்து 21 வயது இளைஞன் ஒருவரை சீனர்கள் கடத்திச் சென்றனர். அவர் சில நாள்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். ஆனால், இந்த அனைத்து சம்பவங்களிலும் இந்திய இராணுவத்தின் தலையீட்டால் மட்டுமே பிடித்துச் செல்லப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: அருணாச்சல பிரதேசம்: 5 இந்தியர்கள் மாயமான விவகாரம்... இந்திய ராணுவத்தினரிடம் ஒப்படைத்த சீனா!
from International https://ift.tt/3Ar5z1l
via
