இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து உருவாக்கிய பிரமோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகள், ஒளியை விட 3 மடங்கு அதிக வேகத்தில் செல்லக் கூடியது. கிட்டத்தட்ட 450 கி.மீ தூரத்தில் இருக்கும் இலக்கை நோக்கி தாக்கும் வலிமை கொண்டது. மேலும், இந்த ஏவுகணையைக் கப்பல்கள், நீர்மூழ்கிக்கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் தரையில் இருந்தும் இயக்க முடியும்.
இத்தனை சிறப்பு வாய்ந்த ஏவுகணையை பிலிப்பைன்ஸ் வாங்க 374 மில்லியன் டாலர் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக, அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. இது இந்தியாவின் முதல் பாதுகாப்பு உபகரண ஒப்பந்தமாகும்.
கடந்த ஆண்டு, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட், ராஜ்யசபாவில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி அதிகரிப்பு குறித்து தெரிவித்திருந்தார்.
அஜய் பட், ``இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி 2016-17-ல் ரூ.1,521 கோடியிலிருந்து 2020-21-ல் ரூ.8.43 கோடியாக அதிகரித்துள்ளது. 2018-19-ல் இந்த ஏற்றுமதி ரூ.10,745 கோடியாக இருந்தது. 2025-ம் ஆண்டிற்குள் இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதிக்கு ஐந்து பில்லியன் டாலர்களாக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது" என்று தெரிவித்தார்.
கனிமவளம் கொட்டிக்கிடக்கும் தென்சீனகடல் பகுதியைச் சீனா உரிமை கோருகிறது. ஆனால், பிலிப்பைன்ஸ், வியட்நாம், புரூனே, இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், சீனாவைச் சமாளிக்க இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணையை பிலிப்பைன்ஸ் வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
Also Read: `பிரமோஸ் ஏவுகணை குறித்த ரகசியத் தகவல்கள் பரிமாற்றம்?’ - நாக்பூர் டி.ஆர்.டி.ஓ ஊழியர் கைது
from International https://ift.tt/3g38Fz8
via
