அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்று அமெரிக்க அதிபரானார். சமூக வலைதளங்களில் கலவரத்தைத் தூண்டும் வகையில் அவதூறாகக் கருத்துகள் பதிவிட்டு வந்ததால் ட்விட்டர் நிறுவனம் டொனால்டு டிரம்பின் ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கியது. ட்விட்டரில் கணக்கு முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஃபேஸ்புக் மற்றும் கூகுளின் யூடியூபிலிருந்தும் அவரின் கணக்குகள் முடக்கப்பட்டன. ஃபேஸ்புக் நிறுவனம் இரண்டரை ஆண்டுகள் தடை விதித்தது. கூகுள் நிறுவனம் காலவரையற்ற தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Time for some Truth!!! pic.twitter.com/jvyteDb5gW
— Donald Trump Jr. (@DonaldJTrumpJr) February 15, 2022
இந்த நிலையில், முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் புதிதாக சமூக வலைதளம் ஒன்று தொடங்கவிருப்பதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து 'TRUTH' சோஷியல் மீடியா எனப் பெயரிடப்பட்டுள்ள சமூகவலைதளம் ட்ரம்பின் (TMTG - Trump Media & Technology Group) நிறுவனத்துக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது.
இதையொட்டி, ட்ரம்ப் புதிதாக தொடங்கி இருக்கும் அவரது சமூகவலைதளத்தில், `தயாராக இருங்கள்... உங்களுக்குப் பிடித்த ஜனாதிபதி விரைவில் உங்களைப் பார்ப்பார்' என்று பதிவிட்டிருந்தார். அவருடைய மகன் ஜீனியர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், `சில உண்மைகளுக்கான நேரம்' எனக் குறிப்பிட்டு, டிரம்பின் பதிவை அவருடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இது TRUTH சோஷியல் மீடியாவில் டொனால்டு டிரம்பின் முதல் பதிவு என்பது குறிப்பிடத்தக்கது.
from International https://ift.tt/rSPCL54
via
