அமெரிக்கா அங்கம் வகித்துள்ள நேட்டோ அமைப்பில் இணைவதற்கு உக்ரைன் ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால், அண்டை நாடான ரஷ்யா உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒரு லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களை ஆயுதங்களுடன் உக்ரைன் எல்லையில் நிலை நிறுத்தியிருக்கிறது. அதனால், எந்த நேரமும் போர் வெடிக்கும் சூழல் அங்கு நிலவுகிறது.
இந்த விவகாரத்தில் உக்ரைனுக்கு ஆரம்பம் முதலே ஆதரவு தெரிவித்து ரஷ்யாவுக்கு எதிராக செயல்பட்டு வரும் அமெரிக்கா, தொடர்ந்து ரஷ்யாவை எச்சரித்து வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், ``உக்ரைனில் தற்போது மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
இதுகுறித்து அதிபர் ஜோ பைடன் ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசி அழைப்பில் பேசுவார் என நான் எதிர்பார்க்கிறேன்" என தெரிவித்திருந்தார். இதற்கிடையில், அங்கு போர் மேகம் சூழ்ந்து இருப்பதால் உக்ரைன் அரசு தனது எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.
உக்ரைன் எல்லையில் அமைந்துள்ள கலான்சக் நகரில், வதந்திகளால் கலவரம் வெடித்தால் எப்படி சமாளிப்பது என்று உக்ரைன் அரசு அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளித்தது வருகிறது.
இந்த ஒத்திகை பயிற்சிகளில் காவல்துறை, தேசிய பாதுகாப்புப் படை, எல்லைப் பாதுகாப்பு படை மற்றும் மீட்புப் பணி பிரிவுகளை சேர்ந்த 1,300-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியில் எம்.ஐ-8 வகை ஹெலிகாப்டர்கள் மற்றும் கவச வாகனங்களும் பயன்படுத்தப்பட்டன. இதேபோன்று எல்லையில் அமைந்துள்ள பிற ஊர்களிலும் இந்த பயிற்சிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: உக்ரைன் - ரஷ்யா விவகாரம்: `இந்தியா உறவை பாதிக்காது..!’- அமெரிக்கா
from International https://ift.tt/Ioyeq3t
via
