ஏற்கெனவே 2020-ல் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது எனக்கூறி 200-க்கும் மேற்பட்ட சீன செயலிகளைத் தடை செய்தது மத்திய அரசு. அதில் இந்தியாவில் பிரபலமாகப் பலராலும் பயன்படுத்தப்பட்டு வந்த டிக்டாக், பப்ஜி, ஹலோ, வீசாட், யூசி ப்ரௌசர் போன்ற பல செயலிகள் தடை செய்யப்பட்டன. தற்போது அதே போல மீண்டும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன என்பதன் அடிப்படையில் மீண்டும் 54 சீன செயலிகளைத் தடை செய்திருக்கிறது மத்திய அரசு. இந்த முறை தற்போது ஸ்மார்ட்போன் பயனர்களிடையே அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஃப்ரீ பயர், டூயல் ஸ்பேஸ், வைவா வீடியோ எடிட்டர் உள்ளிட்ட பல செயலிகள் தடைசெய்யப்பட்டிருக்கின்றன.
முன்னர் தடைசெய்யப்பட்ட செயலிகளில் பலவும் மீண்டும் வேறு பெயரில் ரீபிராண்டிங் செய்யப்பட்டு மீண்டும் இந்தியாவில் புதிதாக வெளியிடப்பட்டிருக்கின்றன. மேலும், முன்பு தடை செய்யப்பட்ட செயலிகளைப் போலவே இந்தச் செயலிகளில் பலவையும் பயனர்களின் ஸ்மார்ட்போன்களில் சேதம் விளைவிக்கக்கூடிய வகையில் செயல்படுகின்றன அல்லது இந்தியாவில் இருக்கும் பயனர்களின் தகவல்களை அவர்களுடைய அனுமதி இன்றி சீனாவில் இருக்கும் டேட்டா சென்டர்களுக்கு அனுப்புகின்றன என இந்த செயலிகளின் மேல் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. தற்போது இந்த 54 செயலிகளும் அனைத்து ஆப் ஸ்டோர்களில் இருந்தும் நீக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், முன்பே பதிவிறக்கம் செய்தவர்களில் சில பயனர்களால் தற்போதும் இதனைப் பயன்படுத்த முடியும். எனவே, மத்திய அரசு தடை செய்த செயலிகளைப் பயன்படுத்துபவர்கள் அதனைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கக் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.
from International https://ift.tt/IjKWvdk
via
