அமெரிக்க பாதுகாப்பு விவகாரங்களை கண்காணிக்கும் பென்டகனில் முக்கிய பதவிகளுக்கு ஐந்து பேரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரைத்திருக்கிறார். இந்த நிலையில், பாதுகாப்புத்துறையில் நீண்ட அனுபவம்கொண்ட ராதா ஐயங்காரை பாதுகாப்புத்துறையின் உயர் பதவிக்கு அதிபர் பைடன் பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது, ராதா பாதுகாப்பு துணை செயலாளரின் தலைமை அதிகாரியாக பதவி வகித்து வருகிறார்.
ராதா ஐயங்கார் கூகுள், ஃபேஸ்புக் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிந்திருகிறார். ஃபேஸ்புக்கில் கொள்கை பகுப்பாய்வின் உலகளாவிய தலைவராகவும் அவர் பணியாற்றி உள்ளார். மேலும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸில் உதவி பேராசிரியராக இருந்தார். மேலும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார். அவர் பாதுகாப்புத் துறை, எரிசக்தித் துறை மற்றும் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஆகியவற்றில் தேசிய பாதுகாப்பு பிரச்னைகள் தொடர்பான பதவிகளை வகித்துள்ளார்.
from International https://ift.tt/vKQYrRX
via
