உலகின் நம்பர் ஒன் பாப் குழுவான BTS பிரிந்துவிட்டது. இந்த மாதம் இந்தக் குழு அமெரிக்க அதிபரை வெள்ளை மாளிகையில் சந்தித்தது பெரிய நிகழ்வாகப் பார்க்கப்பட்டது.
BTS குழு தற்காலிமாகப் பிரிந்து அவர் அவரின் வாழ்க்கையின் அடுத்தக்கட்டம் குறித்து யோசிக்க இருக்கிறார்களாம். இனி தனித்தனியாக பாடல்கள் வெளியிட இருக்கிறார்கள் என FESTAவில் அறிவித்து இருக்கிறார்கள்.
பொறு... பொறு... BTSன்னா என என்ன எனக் கேட்பவரா நீங்கள்? வீட்டில் இருக்கும் 2K கிட்ஸிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். 'டான்' படத்தில் சிவகார்த்திகேயன் விரலை வைத்து 'லவ் யூ' என்பதை ஒருவாறு காட்டுவாறே, அதுகூட கொரியன் பாலிசிதான். BTS குழு அதைக் காண்பித்தாலும், அது கொரியன் சிம்பலாம், BTS கிடையாதாம். நானொரு 2கே கிட்டிடம் கேட்ட போது இப்படித்தான் பதில் வந்தது.
ஓகே, விஷயத்துக்கு வருவோம். அடுத்த சில மாதங்களுக்கு தனித்தனியாக ஆல்பம் வெளியிட இருக்கிறார்கள். தங்கள் குழுவின் ஒன்பதாண்டு வெற்றிவிழாவைக் கொண்டாடும் விதமாக FESTAவில் இதை அறிவித்திருக்கிறார் RM. அதாவது கிம் நம்ஜூன்.
"மற்ற குழுக்களில் இருந்து BTS தனித்து இருக்கிறது என்றுதான் எப்போதும் நான் எண்ணியிருக்கிறேன். மற்ற கொரிய பாப் குழுக்கள் தங்களிடம் இருக்கும் பாடகர்களை வளரவிடுவதில்லை" என வருத்தப்பட்டார் RM.
"எங்களுக்கு எல்லாமே எங்களின் ரசிகர்கள்தான். எங்கள் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் என்றுதான் நாங்கள் யோசித்திருக்கிறோம். இனி எங்கள் ரசிகர்களின் விருப்பத்தில் எந்தக் குறையும் இல்லாமல் தனித்தனியாக சாதிக்க இருக்கிறோம்" எனக் கண்ணீர் மல்க தெரிவித்தார் பார்க் ஜிமின்.
"இப்ப எங்களுக்கு கொஞ்சம் சோதனையான காலம். எங்களோட தனித்தன்மையத் தேடி நாங்க பயணப்படறோம். அது ரொம்பவே நீண்டதொரு முயற்சி. ஆனா, நாங்க மறுபடியும் ஒண்ணா சேர்ந்து வர்றப்ப வேற லெவல்ல இருக்கும்" என்கிறார் V.
"இனி, ஒண்ணா வாழ்றதோட சந்தோஷம் எப்படி இருக்கும்னு கொஞ்சம் தனியா வாழ்ந்து கத்துக்கப் போறோம். இதை நாங்க நெகட்டிவா பார்க்கல. ஆரோக்கியமானதொரு விஷயமாத்தான் பார்க்கறோம்" என்கிறார் ஹோப்.
இதற்கு முன்பு 2019லும், 2021லும் ஒரு சின்ன பிரேக் எடுத்திருக்கிறது BTS க்ரூப் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த முறை பிரிவு கொஞ்ச காலம் நீடிக்கும் என்றே சொல்கிறார்கள். ஏனெனில் இந்த வீடியோவில் அனைவருமே அழுதுகொண்டுதான் பேசினார்கள்.
இந்தச் சோகத்தை எப்படித் தாங்கிக்கொள்ளப் போகிறார்களோ என உடன் பயணிக்கும் 2K கிட்டிடம் கேட்டால், "காலைல இருந்து எல்லோரும் அந்த சோகத்துலதான் இருக்கோம். ஏன்தான் இப்படி பண்றாங்களோ" என கவலை தோய்ந்த முகத்துடன் பதில் அளிக்கிறார்.
from International https://ift.tt/KcBiHTh
via
