அமெரிக்காவில் வசித்து வருபவர் ஜென் ஹோலிஃபீல்டு. இவர் தன் 14 வயது மகள் ப்ளேஸுக்குக்கும், தனக்கும் அமெரிக்காவின் மெரீடியனில் உள்ள பர்கர் கிங் (Burger King) உணவு நிறுவனத்தில் இருந்து 9 சிக்கன் ஃப்ரை மற்றும் சில ஜாலப்பீனோ பாப்பர்ஸையும் (jalapeno poppers) வாங்கி உள்ளார்.
வீட்டுக்குப் போகும்வரை அவற்றைக் கொறித்துக் கொண்டே போகலாம் என நினைத்தவர்கள், 6 ஃப்ரைஸை காலி செய்தனர். அதன் பிறகுதான் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மிச்சமிருந்த ஃப்ரைஸில், பாதி புகைக்கப்பட்ட சிகரெட் துண்டு இருப்பதைப் பார்த்து திடுக்கிட்டனர்.
இது குறித்து ஜென் கூறுகையில், மகள் விரும்பியபடியே அவளுக்கு சிக்கன் ஃப்ரை கிடைத்தது. போகும் வழியில் தனக்கு சிகரெட்டின் வாசனை வருவதாகச் சொன்னாள். சில நேரம் அவள் அப்படித்தான் கவனத்தை ஈர்க்க ஏதாவது செய்வாள். அதனால் நான் ‘சிகரெட்டெல்லாம் இல்லை’ என்று சொன்னேன்.
மறுபடியும் நானும் அவளும் சாப்பிட ஆரம்பித்தோம். தொடர்ந்து தனக்கு சிகரெட் வாசனை வருவதாகக் கூறிக் கொண்டே இருந்தாள். 6 ஃப்ரைஸை காலி செய்த நிலையில், அதில் பாதி புகைக்கப்பட்ட சிகரெட் துண்டு இருந்ததை கவனித்தோம்.
யாரோ ஒருவர் புகைத்து பாதி துண்டை அதில் போட்டுள்ளார். அதில் எச்சிலும் இருந்தது. அது மிகவும் அருவருப்பாக இருந்தது. இதைப் பார்த்த என் மகள், நிலைகுலைந்து அதிர்ச்சியில் ஆழ்ந்தாள்.
இத்தனை வருடங்களாக நான் ஃபாஸ்ட் ஃபுட்ஸ் சாப்பிட்டு வருகிறேன். அதில் எப்போதாவது முடி காணப்படுவது வழக்கம். ஆனால் எந்தக் காலத்திலும் சிகரெட் இருந்ததில்லை.
உடனே, அந்த உணவக நிறுவன கிளையின் மேலாளரைத் தொடர்பு கொண்டபோது, அந்த உணவுக்கான பணத்தை அங்கே வந்து பெற்றுக் கொள்ளும்படி கூறினார். உணவு தயாரிக்கும் இடத்தில் சிகரெட் துண்டு எப்படி வந்தது என்பதை விசாரிக்க வேண்டும் என, மீதமிருந்த சிக்கன் ஃப்ரை மற்றும் ரசீதுகளை ஆதாரமாக வைத்துக் கொண்டேன்.
நியாயமான விலை, சுவையான உணவு என பர்கர் கிங் மற்றும் அதன் கூட்டாளர்கள் உறுதியளிக்கும் உணவின் தரத்தை இந்த நிகழ்வு பிரதிபலிக்கவில்லை. இந்தச் சம்பவம் குறித்து அறிய சம்பந்தப்பட்ட ஃபிரான்ச்சைஸியை தொடர்பு கொண்டுள்ளோம். உடனடி நடவடிக்கை எடுப்போம்'' என பர்கர் கிங் தரப்பில் இருந்து பேசிய பெண் தெரிவித்துள்ளதாக, தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் ஜென்.
from International https://ift.tt/NatrX2o
via
